தூங்கா நகரம் மதுரைக்கு போறீங்களா? பாண்டிய நாட்டு உணவுகளை சுவைக்க சிறந்த இடங்கள்!
தூங்கா நகரம் மதுரை தனது வரலாற்று சிறப்பு போலவே உணவிற்கும் உலகளவில் பிரபலமான நகரமாக உள்ளது. காலை முதல் நள்ளிரவு வரை பரோட்டா, கொத்து பரோட்டா, பிரியாணி, பஞ்சுபோன்ற இட்லி, மிருதுவான தோசை போன்ற சுவையான உணவுகள் மதுரையில் கிடைக்கும்.
மதுரைக்கு வந்தால் மிஸ் பண்ண கூடாது உணவு வகைகளை முதலில் காணலாம்.
1. கரி தோசை
மதுரையின் ஸ்பெஷல் உணவுகளில் முக்கியான ஒன்று கரி தோசை. மட்டன் கரி தோசை என்றும் குறிப்பிட படும் இது, மூன்று அடுக்கு அரிசி அப்பம் அல்லது தோசையைக் கொண்டு அதன் அடிவாரத்தில் ஒரு ஆம்லெட்டைக் கொண்டிருக்கும்.
இன்னும் சிறப்பாக நறுக்கிய இறைச்சி, வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி-பூண்டு விழுது ஆகியவற்றால் செய்யப்பட்ட மேல்புறங்களில் அலங்கரிக்கப்படுகின்றன. எழுதும் போதே நாக்கை ஊறவைக்கும் இந்த கரி தோசை மதுரை விசிடில் மிஸ் பண்ண கூடாத விஷயமாகும்.
2. பன் பரோட்டா
மதுரை பன் பரோட்டா நாடுகளை கண்டு பல இடங்களில் பிரபலமாக இருக்கிறது. உப்பலாக வரும் பரோட்டாவை சூடாக சாப்பிடவே பலரும் லைனில் நிற்பார்கள்.
இதன் side-dish இன்னும் சிறப்புவாய்ந்த ஒன்று சிக்கன் சால்னா அல்லது காரமான சட்னி போன்றவையும் மதுரை பன் பரோட்டாவின் முக்கிய அம்சம்.
3. ஜிகர்தண்டா
மதுரை என எழுத துவங்கிவிட்டால், எப்படி ஜிகர்தண்டாவை தள்ளிவைப்பது. மதுரையில் பிரபலமான இந்த பானம், ஊர் தாண்டி பல இடங்களிலும் மக்களை குவில் நிற்கவைக்கிறது.
கடும் வெப்ப நகரமான மதுரையை குளிர செய்கிறது இந்த street food. பால், பாதாம், சர்சபரில்லா சிரப் மற்றும் ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீம் போன்றவற்றை கொண்டு புத்துணர்ச்சியை கொடுக்கிறது ஜிகர்தண்டா.
சைவம்
1. ஹோட்டல் ஸ்ரீ சபரீஸ்- வெஜ் உணவகம்
ஹோட்டல் ஸ்ரீ சபரீஸ்- வெஜ் ரெஸ்டாரன்ட் மதுரையில் அமைந்துள்ள நன்கு அறியப்பட்ட சைவ உணவகமாகும்.
இங்கு டேக்அவுட், இருக்கை மற்றும் தெரு பார்க்கிங் போன்ற வகைகளில் உணவுகள் வழங்கப்படுகின்றன. எளிதான கட்டணத்தில் காலை டிபன் பொங்கல் மற்றும் நெய் தோசை போன்றவற்றால் துவங்கி மத்திய உணவு வகைகளையும் இந்த உணவகம் பரிமாறுகிறது.
2. சங்கம் வெஜ் ஹோட்டல்
மதுரை சங்கம் வெஜ் ஹோட்டல் 1984 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. மதுரையின் பல இடங்களில் நாம் இக்கடையை காணலாம்.
எளிமையான விலையில் காலை டிபனில் துவங்கி மத்திய சாப்பாடு, மாலை சிற்றுண்டி, இரவு டின்னர் வரை பல் வெரைட்டிகளை ஆடுகிறார்கள் இந்த உணவகத்தில். இது வரை விசிட் அடித்தவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்டது பன்னீர் பட்டர் மசாலா.
அசைவம்
1. அம்மா மெஸ்
மதுரை வந்துட்டு அசைவம் சாப்பிடாம எப்படி. அப்படி நீங்க options தேடுனா உங்களோட லிஸ்ட் இருக்க வேண்டிய முக்கியமான ஹோட்டல் அம்மா மெஸ்.
அசைவ உணவுகளுக்கு பெயர் பெற்ற இந்த உணவகம் அழகர் கோயில் பிரதான சாலையில் அமைந்திருக்கிறது. சிக்கன், மட்டன் என பல வகை நான் வெஜ் உணவுகள் இருந்தாலும், மிஸ் பண்ண கூடாத ஒன்று மீன் குழம்பு.
2. மிளகு ஹோட்டல்
செட்டிநாடு மற்றும் சைனீஸ் உணவுகளை கலந்து ஒரு வகை புது சுவையை நீங்க சாப்பிட யோசித்தால், உடனே மதுரையில் செல்ல வேண்டிய இடம் மிளகு ஹோட்டல்.
அதன் பெயர் குறிப்பிடுவது போல, தமிழில் "மிளகு" என்று பொருள்படும், மெனுவில் நறுமண மசாலாக்களால் உட்செலுத்தப்பட்ட சுவையான உணவுகள் நிறைந்துள்ளன. பெப்பர் சிக்கன் ஒரு தனித்துவமான உணவாகும். இது சுவைகள் மற்றும் காரமான உணவு பிரியர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ்.
3. தமிழக உணவு விடுதி
இந்த உணவகம் பலரால் பரிந்துரைக்கப்பட்ட ஸ்பெஷல் உணகவமாக பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மலிவு விலையில் அசைவ உணவுகளுக்கு பெயர் பெற்றதாக உள்ளது தமிழக உணவு விடுதி.
சுவையான பிரியாணி, மட்டன் கோலா உருண்டா, முட்டையுடன் மட்டன் சுக்கா மற்றும் சிக்கன் கொத்து பொரோட்டாவை மிகவும் பேமஸ். அதே போல மட்டன் பிரியாணி மற்றுமொரு தவிர்க்க கூடாத டிஷ்.
இனி மதுரையில் பிரபலமான சில உணவுகளுக்கு என பிரபலமான இடங்களை காணலாம்.
பேமஸ் ஜிகர்தண்டா
மதுரை'னா ஜிகர்தண்டா, ஜிகர்தண்டா'னா மதுரை. இதுல டவுட்டே இல்லை. அப்படி மதுரை ட்ரிப் வந்தாச்சு. எங்கடா ஜிகர்தண்டா சாப்பிடலாம்'னு யோசிக்காதீங்க.
மதுரையே ஜிகர்தண்டா'க்கு பேமஸ் தான். ஆனால், சில இடங்களை குறிப்பிட்டு சொல்லணும்'னா தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது பேமஸ் ஜிகர்தண்டா. ஐஸ் கிரீம் பார்லர் போன்ற பல பேமஸ் ஜிகர்தண்டா கடைகள் நகரின் பல இடங்களில் காணப்படுகின்றன.
பர்மா இடியாப்ப கடை
சிறிய கடை தான் என்றாலும் பர்மா இடியாப்ப கடை மிகவும் பிரபலமான ஒரு உணவகமாவு. இங்கு கிடைக்கும் ஒரே உணவு இடியப்பம் மட்டுமே.
உள்ளூர் மக்களை மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது இந்த உணவகத்தின் எளிமை. இடியாப்பத்தில் இதனை வெரைட்டியா என மூக்கு மேல் கை வைக்கும் படி, பல விதமான இடியாப்பங்களை இங்கு கிடைக்கின்றன.
பில்'ஸ் பிஸ்ட்ரோ (Phil's Bistro)
Phils Bistro பாஸ்தா மற்றும் பீட்சா வகைகளுக்கும் அமெரிக்க, சீன உணவுகளுக்கு மிகவும் பிரபலமான உணவகமாகும். அதே நேரத்தில் இங்கு இத்தாலிய கிளாசிக் வகைகளை பரிமாறப்படுகின்றன.
உணவுகளின் விலை சற்று உயர்வை இருக்கும் போதிலும், சுவையானது என்ற காரணத்தால், எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. Phils Bistroவிற்கு வருபவர்கள், இந்தியாவில் கிடைக்கும் மிகச்சிறந்த pizza'க்களில் ஒன்றை சுவைத்து விட முடியும்.
பிரிட்டிஷ் பேக்கரி கஃபே
சாயங்காலம் அப்படியே ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் போது லைட்டா பசிக்கிறதா? உடனே வண்டிய பிரிட்டிஷ் பேக்கரி கஃபே'க்கு விடுங்கள்.
நவீன ஸ்டைலான துரித உணவு புகழ் பெற்ற உணவகம் இந்த பிரிட்டிஷ் பேக்கரி கஃபே. சில பஃப்(Puff)'இல் துவங்கி, கப்புசினோ(Cappuchino) என அநேக வகை பேக்கரி ஐட்டம் கிடைக்கின்றன.
ஸ்ரீ மீனாட்சி மதுரை பன் பரோட்டா
மதுரைக்கு பேமஸ் என்றால் மீனாட்சி அம்மன் கோவிலை சொல்பவர்களை போலவே பன் பரோட்டாவையும் தெரிவிப்பார்கள். அப்படி என்னடா இருக்கு'னு யோசிக்காம மதுரை வந்த நேர போய் சாப்பிட்டுருங்க.
அப்படி போக வேண்டிய ஒரு ஸ்பெஷல் இடம் தான் இந்த ஸ்ரீ மீனாட்சி மதுரை பன் பரோட்டா. மதுரைல இருந்து மீனாட்சி'யையும் பிரிக்க முடியாது - பன் பரோட்டாவையும் பிரிக்க முடியாது என காட்டுகிறது இந்த கடை.