4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை உயிரிழப்பு..!
கும்பகோணத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை உயிரிழந்தது.
சிறுமி உயிரிழப்பு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெசன்ட் சாலையில் வசித்து வருபவர் ராஜு இவருக்கு 4 வயதில் கோபிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
நேற்று பச்சையப்பன் தெருவில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் ராஜு. வீட்டிற்கு சென்ற சிறுமி வீட்டின் பால்கேனியில் விளையாடியுள்ளார்.
அப்போது சிறுமி கம்பியின் மீது ஏறிய போது தவறி கீழே விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சிறுமியை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சிறுமி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!