உடனே மருத்துவமனைக்கு செல்லுங்கள்.. - இறக்கும் தருவாயில் நண்பர்களை எச்சரித்த மாணவன்

By Nandhini Jun 02, 2022 11:12 AM GMT
Report

ஆரணியில் தந்துாரி சிக்கன் சாப்பிட்ட 12 ஆம் வகுப்பு மாணவர் திருமுருகன் உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் என்பவரின் மகன் திருமுருகன் இவர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார்.

இவர் கடந்த 24 ஆம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆரணி பகுதியில் உள்ள காந்திநகர் சாலையில் உள்ள உணவகத்தில் தந்துாரி சிக்கன் மற்றும் சிக்கன் ப்ரைட் ரைஸ் சாப்பிட்டுள்ளார்.

சாப்பிட்ட பின் வீட்டுக்கு சென்ற அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பெற்றோர் மருத்தவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் சாப்பிட்ட உணவ விஷமாக மாறியதாக தெரிவித்தனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக வேலுாரில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அந்த மாணவர் சிகிச்சை பலனின்றி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்போது அந்த மாணவன் குறித்து தகவல் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆரணியில் சிக்கன் தந்தூரி சாப்பிட்ட பலியானதாக சொல்லப்படும் பிளஸ்-2 மாணவர், உயிர் போகும் தருவாயில் தன் நண்பர்களுக்கு வாட்ஸப் மெசேஜ் அனுப்பி உடனடியாக அனைவரும் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று எச்சரித்துள்ளான்.   

உடனே மருத்துவமனைக்கு செல்லுங்கள்.. - இறக்கும் தருவாயில் நண்பர்களை எச்சரித்த மாணவன் | Student Death