கொரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
கொரோனா காலகட்டத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிர்ச்சி தகவல்
உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவின் கோரதாண்டவத்தால் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டன. அதே சமயம் செலவில்லாமல் திருமணங்களும் நடைபெற்றன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கின் போது ஏராளமான திருமணங்கள் நடந்தன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
11 ஆம் வகுப்பை சேர்ந்த 417 மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது. திருமணமான மாணவிகளின் விவரங்களை சேகரித்து படிப்பு பாதிக்காமல் இருக்க மாணவிகளை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து படிப்பை தொடர்வதற்கு கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் இவ்வளவு மாணவிகளுக்கு திருமணம் நடத்திருப்பது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் விளையாடிய ஊஞ்சலை ஆட்டிவிட்டு மகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்