விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது - பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்க தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதால் மாணவர்கள் தீவிரமாக படித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ள காரணத்தால் பொதுத்தேர்வுகள் நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாக மாணவர்களுக்கு பள்ளிகளில் மாலை நேரங்களிலும் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்க தடை என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை இந்த உத்தரவை பிரப்பித்துள்ளது.