உடலில் இந்தப் பிரச்சனை இருக்கா? இரவு 7 மணிக்கு மேல் 'டீ' குடிக்கவே கூடாது!
டீ குடிப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
தேநீர்
டீ, காபி போன்ற சூடான பானங்களை குடிப்பது புத்துணர்ச்சி தரும் என்று பலர் நம்புகின்றனர். இவற்றில் உள்ள காபி பீன்ஸ் ஆற்றல் அளவை அதிகரித்து உங்கள் உடலில் அதிக ஆற்றலை உற்பத்தி செய்கிறது.
ஆனால், அளவாக தேநீர் அருந்துவதுதான் உடல் நலத்திற்கு நல்லது. மேலும், இரவு 7 மணிக்கு மேல் தேநீர் அருந்தினால் சில பக்கவிளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சூடான பானத்தில் உள்ள கலவைகள் அமிலத்தன்மை, ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கின்றன.
மருத்துவர்கள் எச்சரிக்கை
எனவே நெஞ்செரிச்சல், அசிடிட்டி மற்றும் வாயு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இரவில் டீ குடிக்கக் கூடாது. படுக்கைக்கு முன் தேநீர் குடித்தால், காஃபின் உங்கள் தூக்கத்தை பாதிக்கும். நீரிழப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. இது தலைவலி, சோர்வு மற்றும் கவனம் இல்லாமை போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இதயக் கோளாறு உள்ளவர்கள் எப்போது, எவ்வளவு தேநீர் குடிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள மருத்துவரை அணுக வேண்டும். தேநீர் வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்கிறது.
இது வயிற்று வலியை ஏற்படுத்துகிறது. இரவு உணவிற்கு முன் குடிப்பதால் பல்வேறு வயிற்று பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.