தினமும் முட்டை சாப்பிடுறீங்களா? இதனால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா!
முட்டை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்குமா என்பது குறித்து பார்க்கலாம்.
தினமும் முட்டை
முட்டையில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. எடை இழப்பு அல்லது தசை அதிகரிப்பு போன்றவற்றுக்கு உதவுகிறது.
இதன் மஞ்சள் கரு நமது உடலில் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தும் என பலர் கூறுகின்றனர். சிகாகோவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் இதுகுறித்த ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், தினசரி உட்கொள்ளும் ஒவ்வொரு அரை முட்டைக்கும்,
17.5 ஆண்டுகளில் இருதய நோய் வருவதற்கான 6 சதவீதம் அதிக ஆபத்தும், 8 சதவீதம் இறப்பு அபாயமும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வான ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங் படி, நம் உடலில் உள்ள பெரும்பாலான கொலஸ்ட்ரால் கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது.
கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?
நாம் உட்கொள்ளும் கொழுப்பிலிருந்து அல்ல. கல்லீரலின் கொலஸ்ட்ரால் உற்பத்தி முதன்மையாக நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளால் தூண்டப்படுகிறது. எனவே, ஒரு நாளைக்கு ஒரு முட்டையை உட்கொள்வது பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது.
முட்டையில் புரதம், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலம். இது பெரும்பாலான நபர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவைக் கணிசமாக பாதிக்காமல் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
எனவே, ஊட்டச்சத்து நிறைந்த உணவை முற்றிலுமாகத் தவிர்ப்பதற்குப் பதிலாக சமநிலை மற்றும் மிதமான நிலையில் கவனம் செலுத்துவது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.