ட்ரெண்டாகும் தாமரை விதை - எதற்காக, எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
தாமரை விதையின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
தாமரை விதை
தாமரை பூவில் இருந்து விதைகளை சாப்பிடுவதன் மூலம் நமக்கு எண்ணற்ற பலன்கள் கிடைக்கிறது. கால்சியம் சத்து தாமரை விதைகளிலும் கிடைக்கிறது.
எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிட்டு பலன் அடையலாம். தூக்கத்தை மேம்படுத்தும். தசைப்பிடிப்பு அல்லது தசைவலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் சாப்பிடலாம்.
பலன்கள்
குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களிடைய தசைகள் வேகமாக வளர்ச்சி அடையும். இதில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. எனவே, இதை சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்வு மேலோங்கும் மற்றும் அதிக சக்தியுடன் செயல்படுவார்கள்.
சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் இதனை சாப்பிடலாம். இதில் கலோரிகள் மிகக் குறைவு. ஆகவே, உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு பேனில் நெய் சேர்த்து அடுப்பில் வைத்து சூடானதும் அதில், மக்கானா எனப்படும் தாமரை விதைகளைச் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் வறுக்கவும். அது பொன்னிறமானதும் அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.