இனி வாழைப்பழத் தோலை தூக்கிப் போடாதீங்க; இப்படி யூஸ் பண்ணுங்க - முகம் மின்னும்
வாழைப்பழத் தோலில் உள்ள பலன்கள் குறித்து அறிந்துக்கொள்வொம்.
வாழைப்பழத் தோல்
வாழைப்பழத்தின் தசைப்பகுதி எப்படி ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளதோ, அதேப் போல் அதன் தோலிலும் பல்வேறு சத்துக்களும், பைட்டோ நியூட்ரியண்ட்டுகளும் உள்ளன.
இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள், பொடுகுத் தொல்லையில் இருந்து நீக்கவும், ஸ்கால்ப்பை சுத்தமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. குறிப்பாக, தோலில் உள்ள பொட்டாசியம் மற்றும் நீர்ச்சத்து, சருமம் மற்றும் தலைமுடியில் ஏற்படும் வறட்சியைப் போக்க உதவுகிறது.
வாழைப்பழத் தோல் சரும கருமையை நீக்கி பிரகாசமாக்கவும், சருமத்தில் உள்ள முதுமைக் கோடுகளை நீக்கவும் உதவி புரிகிறது. வாழைப்பழத்தின் தோலை எடுத்து, அதன் உட்பகுதியால் முகத்தை மென்மையாக 15-20 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி வர முகம் எப்போதும் இளமையாக காட்சியளிக்கும்.
நன்மைகள்
வாழைப்பழத்தின் தோலை எடுத்து, அதை சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு, பாலை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
வாழைப்பழத் தோலை எடுத்து அரைத்து, அத்துடன் சிறிது மஞ்சள் தூள், சர்க்கரை மற்றும் தேன் சேர்த்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும். வாழைப்பழ தோலை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் பாலை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து,
அதோடு 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசினால் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.