சுகர் இருக்கா? 3 வேளையும் சாதம் சாப்பிடுறதை தவிர்க்க முடியவில்லையா - இதை பண்ணுங்க
நீரிழிவு நோயாளிகள் பலரால் உணவு கட்டுப்பாட்டினை கடைப்பிடிக்க முடியவில்லை.
நீரிழிவு நோயாளிகள்
நீரிழிவு நோயாளிகள் மருத்துவர் பரிந்துரைப்படி மருந்துகளை பின்பற்றுவதுதான் சிறந்தது. மேலும், சமசீரான உணவுகளையும், நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளையும் தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும்.
அரிசி சாதத்தில் அதிகளவு கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்துள்ளது. இது ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை துரிதப்படுத்தும் என்பதால் இதனை அவர்கள் சாப்பிட கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் 3 வேளையும் அரிசி சாதத்தை சாப்பிட வேண்டும் என்று பல நீரிழிவு நோயாளிகள் விருப்பம் கொள்கிறார்கள்.
உணவு கட்டுப்பாடு
அதன் படி பக்க விளைவுகள் ஏதுமின்றி அரிசி சாதத்தை சாப்பிட சில வழிகள் உள்ளது. பகுதியளவு சாதத்தை மூன்று வேளையும் நீரிழிவு நோயாளிகள் எடுத்து கொள்ளும் பட்சத்தில், குறைந்தப்பட்சம் ஒரு நாளைக்கு 250 கிராம் அளவிலான அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை எடுத்து கொண்டால் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்து கொள்ளலாம்.
அதே வேளையில் நிலத்திற்கு கீழே விளையக்கூடிய காய்கறிகளை சாப்பிட கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதன்படி கிழங்கு வகைகள், கேரட், பீட்ரூட் போன்றவற்றை தவிர்க்கவும். உணவு கட்டுப்பாடுகளை சரியான முறையில் பின்பற்றி,
மருந்து மாத்திரைகளை எடுத்து கொள்வதோடு, மாதம் ஒரு முறை ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்வது மிகவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.