வணிகர் சங்க நிர்வாகி வெட்டிக்கொலை - தஞ்சையில் வணிகர்கள் போராட்டம்..!
தஞ்சையில் வணிகர் ஒருவரை பைக்கில் வந்த இருவர் அரிவாளால் வெட்டி பணத்தை எடுத்துச் சென்ற நிலையில் வணிகர் செந்தில்வேல் உயிரிழந்த நிலையில் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வணிகர் வெட்டிக்கொலை
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி. கடந்த 9-ம் தேதி மாலை 6 மணி அளவில் அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளது.
அந்த மின்சார தடையை அறிந்து அங்கு பைக்கில் வந்த இருவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் செந்தில்வேல் மற்றும் மருந்து கடை ஊழியரான முருகானந்தை வெட்டி கல்லாவில் இருந்த ரூ.2,500 பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
அப்போது ஒரு வியாபாரியை அரிவாளால் வெட்டியுள்ளனர்.இது தொடர்பாக முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தஞ்சை நகர கிழக்கு போலீசார்,
கரந்தை பகுதியைச் சேர்ந்த ராஜாராமன் மடத்து தெருவைச் சேர்ந்த ஹரிகரன்,பூக்குளம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
போராட்டம்
கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மளிகை கடை வியாபாரி செந்தில்வேல் நேற்று மாலை உயிரிழந்தார்.
இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்வத்தை கண்டித்து தஞ்சையின் பல்வேறு பகுதியில் 300க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
என்னை கொன்று விடுங்கள் - கதறி அழுத ஸ்வப்னா சுரேஷ்!