என்னை கொன்று விடுங்கள் - கதறி அழுத ஸ்வப்னா சுரேஷ்!

Gold smuggling Kerala Pinarayi Vijayan
By Sumathi Jun 12, 2022 08:20 PM GMT
Report

என்னுடன் இருப்பவர்களை குறி வைப்பதற்கு பதிலாக என்னை கொன்று விடுங்கள் என்று கதறி அழுதார் ஸ்வப்னா சுரேஷ்.

ஸ்வப்னா சுரேஸ்

கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி மற்றும் அவரை சார்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக

என்னை கொன்று விடுங்கள் - கதறி அழுத ஸ்வப்னா சுரேஷ்! | Kill Me Swapna Suresh Roar

தங்க கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் அளிந்திருந்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பின்வாங்க போவதில்லை

இதை அடுத்து முதல்வர் பினராயி விஜயனை பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் முதல்வருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

என்னை கொன்று விடுங்கள் - கதறி அழுத ஸ்வப்னா சுரேஷ்! | Kill Me Swapna Suresh Roar

இந்த நிலையில் தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் தரப்பில் அவரின் வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் ஆஜராகி வாதாடி வருகிறார்.

அவர் கேரள அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர் ஒருவரை விமர்சித்து முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வக்கீல் கிருஷ்ணராஜ் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் .

இந்த நிலையில் பாலக்காட்டில் உள்ள தனது வீட்டில் வைத்து ஸ்வப்னா சுரேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட அனைவரின் மீதும்

நான் ரகசிய வாக்கு மூலத்தில் அளித்துள்ள புகாரில் இருந்து எந்த காரணம் கொண்டும் நான் பின்வாங்க போவதில்லை. என் உடன் இருப்பவர்களை குறிவைத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சரித்குமாரை போலீஸ் பிடித்துச் சென்று ஒரு மணி நேரத்தில் விட வைப்பார்கள் என்று ஷாஜ் கிரண் சொன்னார். அதேபோல நடந்தது. என்னுடைய வழக்கறிஞர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யும் என்றார்.

அதுவும் நடந்திருக்கிறது. இப்படி என்னை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பதிலாக என்னை கொன்றுவிடுங்கள்.

அப்படி நடந்தால் அனைத்து உண்மைகளும் மூடப்பட்டு விடும் என்று கதறி அழுதார். செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்வப்னா சுரேஸ் கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது.