தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி - தயாராகும் போக்குவரத்து துறை
சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருப்பதை அடுத்து தமிழக போதுவரத்துத்துறை மற்றும் சாலை பாதுகாப்புத்துறை போக்குவரத்திற்கான பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செஸ் போட்டிகளின் பெருமையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பார்க்கபடுகிறது.
பல்வேறு நாடுகளின் போட்டிகளுக்கு இடையே இந்தியா முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தும் வாய்ப்பை பெற்றிருக்கிறது.
செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதன்முறையாக பிரத்யேகமாக ஒலிம்பியாட் தீபம் ஏற்றப்படுவது இதுவே முதன்முறையாகும்.
சென்னை மாமல்லபுரத்தில் இருந்து எடுத்து செல்லப்படும் ஒலிம்பியாட் தீபம், அனைத்து கண்டங்களில் உள்ள நாடுகளின் பெருநகரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு மீண்டும் சென்னை கொண்டுவரப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
தயாராகும் அரசு துறைகள்
இதில் 190 நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். போட்டிகளில் பங்கேற்பவர்களின் போக்குவரத்திற்காக போக்குவரத்து, சாலைப் பாதுகாப்புத் துறை தயாராகி வருகிறது.
545 இன்னோவா கிரிஸ்டா, ஆடி, பி எம் டபிள்யு, பென்ஸ் வகையான சொகுசு கார்கள் 30, குளிரூட்டப்பட்ட பேருந்துகள் 77 எண்ணிக்கையில் போட்டியாளர்களுக்காக தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வெளிநாடுகளிலிருந்து போட்டியாளர்கள், பயிற்சியாளர்கள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவுள்ளனர். போட்டியாளர்களுக்காக சென்னை, மாமல்லபுரத்தில் பல்வேறு தனியார் விடுதிகளில் 2,700 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச மொழிகளில் விளம்பரங்கள் மேற்கொள்ளும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளாதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.இதனால் வணிகர்கள் அதிகமாக கடைகளையும் அமைத்து வருகின்றனர்.