FIDE செஸ் ஒலிம்பியாட் சர்வதேச போட்டி சென்னையில் நடைபெறுகிறது
2022-ம் ஆண்டுகான FIDE செஸ் ஒலிம்பியாட் சர்வதேச செஸ் போட்டி முதல் முறையாக இந்தியாவில் அதுவும் சென்னையில் நடைபெறுகிறது.
200 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ள இந்த போட்டிகள் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்த FIDE சர்வதேச செஸ் போட்டி, உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக போட்டி நடக்கும் இடத்தில் மாற்றம் செய்யப்பட்டு தற்போது இந்தியாவில், சென்னையில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது எனவும் போட்டிகளில் பங்கேற்க வரும் உலக செஸ் வீரர்களை வரவேற்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.