மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய பெண் கைதி - இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்..!
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சாராய வியாபாரி கைதி தப்பி ஓடிய சம்பவத்தில் இரண்டு காவலர்கள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து கைதி கஸ்தூரி தப்பி ஓடிய சம்பவத்தில் சாராய வியாபாரி கஸ்தூரி மீண்டும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி மாலை நேரத்தில் கஸ்தூரி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தப்பித்தார்.
கஸ்தூரி சாராயம் விற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருவாரூர் பெண்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தார் அதன்பிறகு வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிவித்தார்.
அதன் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக அவரை சில நாட்களுக்கு முன்னதாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள்.
இந்தநிலையில் அஜாக்கிரதையாக பணியில் ஈடுபட்டதாக கஸ்தூரி காவலுக்கு இருந்த இரண்டு பெண் காவலர்கள் கோமதி சத்யா தற்காலிக இடைநீக்கம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவு