முஸ்லிம்கள் போடுகிற எச்சில் பிரியாணிக்காக...அறிவில்ல.. திருமாவளவனை இழிவுபடுத்திய அர்ஜூன் சம்பத்!
இந்து தெய்வங்களை அன்றாடம் ஆபாசமாக பேசிக் கொண்டிருக்கிற திருமாவளவன் ஒரு அயோக்கியன் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
அர்ஜுன் சம்பத்
தமிழகத்தில் சில தனியார் யூடியூப் சேனல்கள் இந்து புராணங்கள் மற்றும் இந்து மதம் குறித்த சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு வருகின்றன.
யூ2 புரூட்டஸ் என்ற யூடியூப் சேனல் வைத்து நடத்தி வரும் மைனர் விஜய் என்பவர் சமீபத்தில் தில்லை நடராஜர் குறித்து வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அவர் கூறியுள்ள கருத்து பாஜக மற்றும் பல இந்து இயக்கத்தினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
யூடியூப் சேனல்கள்
எனவே மைனர் விஜய்யை உடனே கைது செய்ய வேண்டும் என பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஹிந்து மக்கள் கட்சி இது தொடர்பாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மைனர் விஜயை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
யூ டூ புரூட்டஸ்
இந்நிலையில் யூ டூ புரூட்டஸ் சேனலுக்கு எதிராக இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இதில் கலந்துகொண்டார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை கடுமையாக விமர்சித்தார். திருவாசக சித்தர் தாமோதரன் அவர்கள் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. நடராஜ பெருமானை இழிவுபடுத்த வேண்டும் என்ற
முகமது நபி
உள்நோக்கத்தோடு தமிழகத்தில் ஒரு கலவரத்தை தூண்டும் என்ற நோக்கத்தோடு வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது, முகமது நபியை இழிவு படுத்தி விட்டார்கள் என்பதற்காக எல்லா அரசியல் கட்சிகளும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
முதலமைச்சர் ஸ்டாலின் நுபூர் ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுகிறார், அப்படியென்றால் சிவபெருமானை இழிவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா? சிதம்பரத்தில் அத்தனை அடியார்களும் ஒன்று கூடி போராட்டம் நடத்தினோம்,
நபூர் சர்மா
அதிமுக-பாஜக என அனைத்தும் இணைந்து மைனர் விஜயை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம், ஐயப்பன், சிவபெருமான், மாரியம்மன் போன்ற அனைத்து தெய்வங்களும் அவமரியாதை செய்யப்படுகின்றன.
ராஜஸ்தானில் நபூர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த ஒரு ட்ரெய்லர் மதக் கட்டளை பிறப்பித்து வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர்கள்மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கவில்லை,
திருமாவளவன்
திருமாவளவன் இந்து தெய்வங்களை அன்றாடும் அவமரியாதை செய்து கொண்டிருக்கிற ஒரு அயோக்கியன், காசு வாங்கிக்கொண்டு முஸ்லிம்கள் போடுகிற எச்சில் பிரியாணிக்காக அவர் பேசிக்கொண்டு இருக்கிறார்.
நான் கோபமாக பேசுகிறேன், இப்படி எல்லாம் பேச மாட்டேன் திருமாவளவன் மீது மிகுந்த அன்பு கொண்டவன், அந்த திருமாவளவன் நடராஜர் கோவிலுக்கு வந்து திருநீரு பூசினார், ஆனால் இப்போது நடிக்கிறார், அறிவில்ல உனக்கு.
பெற்ற தாயை, இந்த மண்ணை, சிவபெருமானை இழிவுபடுத்தி பேசியிருக்கிறார் அவனை பாதுகாக்க நினைக்கிறீர்களே? பறையர் குளம் சிவன் குளம் அந்த சிவனை இழிவுபடுத்திய இந்த விஜய் அயோக்கியன், சிவனை அவமானப்படுத்தி இருக்கிறான்,
யூ2 புரூட்டஸ்விஜயை கைது செய்யவில்லை என்றால் தமிழக முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
Kaali சர்ச்சை.. நேசத்த பேசறா இந்தக் காளி - இயக்குநர் விளக்கம்!