Kaali சர்ச்சை.. நேசத்த பேசறா இந்தக் காளி - இயக்குநர் விளக்கம்!

Tamil nadu Toronto Gossip Today Canada
By Sumathi Jul 04, 2022 11:54 AM GMT
Report

சுயாதீன திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை செங்கடல், மாடத்தி போன்ற தன் படங்களால் கவனம் பெற்றவர்.

லீனா மணிமேகலை

சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள தனது டாக்குமென்டரியின் பர்ஸ்ட் லுக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு சிலர் கண்டனம் தெரிவித்து, `arrest leena manimekalai' என்ற ஹேஷ்டேக்கைப் பதிவிட்டு வருகின்றனர்.

leena manimekalai

காளி - வேட்டை சமூகங்களோட கடவுள். ஊருக்கொரு பிடாரி, ஏரிக்கொரு அய்யனார்னு சொலவடை உண்டு. நம்மூர்ல பச்சைக்காளி, பவளக்காளி, கருங்காளின்னு பிடாரி தெய்வமா, முத்தாரம்மன் கோயில்கள்ல குலசேகரப்பட்டணங்களில் - காளியை பார்க்கலாம்.

 டோரோண்டோ

அந்தக் காளி டோரோண்டோ நகரத்தில வலம் வந்தா என்ன நடக்கும்னு செய்து பார்த்தது தான் என்னுடைய காளி படம். உலகத்திலேயே அதிக குடியேற்றம் நடக்கிற நகரம் டோரோண்டோ.

kaali

கிட்டத்தட்ட எல்லா இனங்களும் வாழற ஊர் இது. இங்க இருக்கிற யோர்க் பல்கலைக்கழகம் ஒவ்வொரு வருஷமும் ஒரு சர்வதேச திரைப்பட இயக்குநரை தேர்ந்தெடுத்து முழு உதவித்தொகை கொடுத்து வரவழைச்சு

கனடா கலாச்சாரம்

மேலதிக பயிற்சியை எடுத்துக்கொள்ற வாய்ப்பையும் மாஸ்டர்ஸ் டிகிரியையும் வழங்குது. 2020-ம் வருடமே என்னைத் தேர்தெடுத்தருந்தாலும் pandemic, #metoo defamation case அடிப்படையில் பாஸ்போர்ட் முடக்கம் - பிறகு அந்த வழக்குகளை முறியடிக்க போராட்டம்னு

பல காரணங்களால தள்ளிப்போய் 2022-ல தான் கனடா வர முடிஞ்சுது. கனடா முழுக்க சினிமா படிக்கிற மாணவர்கள்-ல சிறந்தவர்கள் சிலரை தேர்தெடுத்து கனடா நாட்டின் பன்முக கலாசாரத்தை பற்றிய படங்களை எடுக்கிற முகாமில் பங்கெடுக்க

ஹேஷ்டேக்

`டோரோண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம்' அழைப்பு விடுத்தது. அந்த முகாம்ல கலந்துக் கொண்டு என் பங்களிப்பா நான் எடுத்த படம் தான் `காளி'. காளியா நடிச்சி இயக்கி தயாரிச்சிருக்கேன்.

ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப் பார்த்தா `arrest leena manimekalai' ஹேஷ்டேக் பதிவிடாம `love you leena manimekalai' ஹேஷ்டேக் பதிவிடுவாங்க.

அவ்வளவு இன வேற்றுமைகளுக்கு மத்தியிலும் வெறுப்பை தேர்ந்தெடுக்காம நேசத்தை தேர்ந்தெடுக்கிறதைப் பற்றிப் பேசறா இந்தக் காளி இன்னும் பேசுவாள் என்றார்.

மசாஜ் பண்ண சொல்லும் சீனியர்ஸ்.. பகீர் கிளப்பிய ஒலிம்பிக் வீராங்கனை!