பொய் விளம்பரங்கள்: 44 லட்சம் யூடியூப் சேனல்கள் நீக்கம்!
கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 44 லட்சம் யூடியூப் சேனல்களை தடை செய்துள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்பேம் மற்றும் தவறான வீடியோக்களை பதிவீடு செய்வதே சேனல்கள் அகற்றப்படுவதற்கு முதன்மைக் காரணம்.
மேலும் பரிசுத் திட்டங்களை தொடர்ச்சியாக அறிவிக்கும் ஸ்பேம் ரக வீடியோக்கள், பின்னூட்டங்களில் பொய் விளம்பரங்களை செயல்படுத்தும் ஸ்பேம்கள் ஆகியவற்றை யூடியூப் விதிமுறைகள் அனுமதிப்பதில்லை.
அந்த வகையில் யூடியூப் நிறுவனத்தின் சமூக விதிமுறைகளை மீறியதற்காகவும், ஸ்பேம் ரக வீடியோக்களை பதிவேற்றியதற்காகவும்,
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் 44 லட்சம் யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள சமூக வழிகாட்டுமுறைகள் அமலாக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 3 மாதங்களுக்குள்ளாக 38 லட்சம் வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது. இவற்றில் 91 சதவீத வீடியோக்கள் யூடியூப் நிறுவனத்தின் மென்பொருள்கள் மூலம் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.
மேலும் 94.3 கோடி ஸ்பேம் ரக பின்னூட்டங்களாலும், 16.9% வீடியோக்களில் நிர்வாணம் இருந்ததாலும் நீக்கப்பட்டுள்ளன.
வீடியோக்களை நீக்கியதில் குழந்தை பாதுகாப்பு மற்றும் வன்முறை உள்ளடக்கமே முக்கிய காரணங்களாக உள்ளது.