அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு - ஜூலை 11 காலை 9 மணிக்கு தீர்ப்பு..!
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் ஜூலை 11 காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜுன் மாதம் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது.மேலும் வருகிற 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றத்தில் காரசார விவாதங்கள் நடந்தது. இரண்டு நாட்களாக இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணையின் போது நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். நீதிபதியின் கேள்விகளுக்கு நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் மனு தாக்கல் செய்தது.
தீர்ப்பு 9 மணிக்கு
இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பை வரும் திங்கள் கிழமை காலை 9 மணிக்கு வழங்க உள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
அதிமுகவின் பொதுக்குழு திங்கள் கிழமை காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு 9 மணிக்கு வெளியாக உள்ளது. இதனால் அதிமுக வட்டாரத்தில் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.
There we go. The Madras High Court cause list is out. The AIADMK general council meet is scheduled to begin at 10 am on Monday & Justice Krishnan Ramasamy will deliver his verdict at 9 am on a plea by Mr. O. Panneerselvam to stall the meet. @THChennai pic.twitter.com/WYVmbYwjks
— Mohamed Imranullah S (@imranhindu) July 8, 2022
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் காமராஜ்..!