அதிமுகவில் ஒற்றை தலைமை அவசியம், அது காலத்தின் கட்டாயம் : முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai Jun 19, 2022 09:56 AM GMT
Report

அதிமுக விவகாரத்தில், மோடி தலையிட்டதாக கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.

வெடித்த ஒற்றைத் தலமை விவகாரம்

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ளது. இதனால், ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனி ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் :

இந்த ஒற்றை தலைமை பிரச்னை எதற்காக வருகிறது என்று எனக்கே தெரியவில்லை. கனவா, நனவா என்பது போல இருக்கு. பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன்.

அதிமுகவில் ஒற்றை தலைமை அவசியம், அது காலத்தின் கட்டாயம் : முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் | This Is The Personal Opinion Of The Obs Os Maniyan

காலத்தின் கட்டாயம்

பொதுச்செயலாளர் பொறுப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது; அவருக்கு தரப்பட்ட அந்தஸ்து அது. மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்றால் அது ஜெயலலிதாவுக்கு செய்யக்கூடிய துரோகம் என தெரிவித்திருந்தார் ஓபிஎஸ் .

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்கள் கூறுகையில், அதிமுக விவகாரத்தில், மோடி தலையிட்டதாக கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து. அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர்.அதிமுகவில் ஒற்றை தலைமை அவசியம். அது காலத்தின் கட்டாயம் எனக் கூறினார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? - பெருகும் ஆதரவு..!