லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் காமராஜ்..!
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் அமைச்சர் காமராஜர் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான இடங்களிலும் அவரின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட மொத்தம் 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் காணக்கில் வராத ரூ.15.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரூ.41லட்சம் பணம், 963 சவரன் தங்கம், 23,960 கிராம் வெள்ளி, ஒரு ஐபோஃன், கணினி, பெண்டிரைவ், ஹார்ட் டிஸ்க், வங்கியில் இருக்கக்கூடிய வங்கி பெட்டக சாவி, ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை
இந்த சோதனை குறித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் காமராஜ்;
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி, அறிக்கை வெளியிட்டது. சோதனையில் எதுவும் கைப்பற்றபடவில்லை.
லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டதை விட எனக்கு அதிகம் கடன் உள்ளது. எனது மகன்கள் இருவர் மருத்துவர்கள்.
அவர்களுக்கு இரு வங்கியில் பலகோடி கடன் வாங்கி தான் தஞ்சாவூரில் மருத்துவமனை கட்டுகிறோம். அதிமுக என்பது மாபெரும் மக்கள் இயக்கம்.
இந்த இயக்கத்தின் வேகத்தை எவராலும் தடுத்திட முடியாது. இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதனால் அதிமுக தொண்டர்களை தொட்டு கூட பார்க்க முடியாது.
கால் தவறி திடீரென கீழே விழுந்த நத்தம் விஸ்வநாதன்.... பதறிப்போன அதிமுக நிர்வாகிகள்