கால் தவறி திடீரென கீழே விழுந்த நத்தம் விஸ்வநாதன்.... பதறிப்போன அதிமுக நிர்வாகிகள்

ADMK
By Nandhini Jul 08, 2022 12:24 PM GMT
Report

ஒற்றை தலைமை விவகாரம்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடும் பூதாகரமாகியுள்ளதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கட்சியை கைபற்றும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஓ.பி.எஸ் அணியினர் கடும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். கடந்த 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் கூட எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தும் ஓ.பி.எஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பியதால் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார்.

எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு

சென்னையில் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு 2440க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்போ ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று கூறி வருகிறது.

ஒரு பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஒரு பொதுக்குழு உறுப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. போடிநாயக்கனூர், பழனிசெட்டிபட்டி தீபன் சக்கரவர்த்தி என்பவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 2,442ஆக உயர்ந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்

ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்த எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கூறியதோடு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ரீ வாரு கல்யாண மண்டபத்தில் மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பெஞ்சமின், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

r-viswanathan-admk

கால் தவறி கீழே விழுந்த நத்தம் விஸ்வநாதன்

அப்போது நடந்து வந்து கொண்டிருந்த நத்தம் விஸ்வநாதன் இரும்பு கம்பி தடுக்கி கால் தடுமாறி கீழே விழுந்தார். அதைப்பார்த்த அதிமுக நிர்வாகிகள் பதறிப்போயினர். அவரை எழுப்பி ததண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். கட்சியின் மூத்த நிர்வாகியான நத்தம் விஸ்வநாதன் தடுமாறி விழுந்த சம்பவம் வானகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

20 ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து கிடந்த தலிபான் நிறுவனரின் கார்