அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு : இன்று விசாரணை
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது .
நிராகரிக்கப்பட்ட தீர்மானங்கள்
கடந்த மாதம் 23ஆம் தேதி சென்னை அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில் ஏற்கனவே ஒப்புதல் செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டு மீண்டும் அதிமுக பொதுக் குழு 11 ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர புதிய தீர்மானங்கள் அல்லது முடிவுகள் எடுக்கக்கூடாது என்றும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தடையிடுவதில்லை. எனவே பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி தடை விதிக்க முடியாது என்று கூறியதுடன், தலைக்கோரிய இடைக்கால கோரிக்கையும் நிராகரித்து உத்தரவிட்டார் .
இன்று விசாரணை
இதை எதிர்த்து சண்முகம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். அத்துடன் நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளார்.

தமிழ் மகன் உசேன் நியமிக்கப்பட்டது நீதிமன்ற அவமதிப்பு என்றும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூடும் என்று அறிவித்துள்ளது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்று விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
இன்றுவரை நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் : ஓ.பன்னீர்செல்வம்