எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கேட்டாரா ராகுல் காந்தி? : விளக்கம் கொடுத்த காங்கிரஸ்

Indian National Congress Rahul Gandhi ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Jul 03, 2022 06:15 AM GMT
Report

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ந்தேதி முடிவு அடைவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 18-ந்தேதி நடக்க உள்ளது.

இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடி இன தலைவரும், ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் கவர்னருமான திரளெபதி முர்மு  போட்டியிடுகிறார்.

எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கேட்டாரா  ராகுல் காந்தி? : விளக்கம் கொடுத்த காங்கிரஸ் | Rahul Gandhi Did Not Talk To Edappadi Palaniswami

காங்கிரஸ் அதிமுகவிடம்ஆதரவு கேட்டதா

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதி அமைச்சர்  யஷ்வந்த் சின்கா போட்டியிட உள்ளார் இந்த தேர்தலில் திரளெபதி  முர்மு மற்றும் யஷ்வந்த் சின்கா இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கேட்டாரா  ராகுல் காந்தி? : விளக்கம் கொடுத்த காங்கிரஸ் | Rahul Gandhi Did Not Talk To Edappadi Palaniswami

வேட்பு மனுக்கள் தாக்கல் முடிந்ததும், பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் திரளெபதி  முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டத் தொடங்கி உள்ளனர்

 இந்த சூழலில் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்க கோரி அதிமுக தலைமையை ராகுல் காந்தி தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த  தகவல் தவறானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்

விளக்கம் கொடுத்த ஜெய்ராம் ரமேஷ்

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த வேட்பாளரான யஸ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்குமாறு அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமிக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்ததாக  செய்தி வெளியானது

இந்த செய்தி முற்றிலும தவறானது, அப்படி எந்த தொலைபேசி அழைப்பும் தொடர்பு கொல்ளவில்லை  தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி பலவீனப்படுத்த முயற்சிகள் நடப்பதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

பை...பை.. மோடி : ஹைத்ராபாத்தில் மோடிக்கு எதிராக பேனர்கள்