பை...பை.. மோடி : ஹைத்ராபாத்தில் மோடிக்கு எதிராக பேனர்கள்

BJP Narendra Modi Hyderabad
By Irumporai Jul 02, 2022 06:30 AM GMT
Report

ஹைத்ராபாத்தில் இன்றும் நாளையும் பிரமாண்டமாக நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

ஹைத்ராபாத்தில் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்திற்கு வரவுள்ள நிலையில் மோடியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இன்று பிற்பகல் இந்த செயற்குழு கூட்டம் தொடங்குகிறது. ஜே.பி. நட்டா தொடக்க உரை நிகழ்த்துகிறார். நாளை பிரமாண்ட பேரணி, மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பை...பை.. மோடி  : ஹைத்ராபாத்தில் மோடிக்கு எதிராக பேனர்கள் | Modi Banners Against In Hyderabad

இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதையொட்டி அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் வருகிறார். மரபுபடி பிரதமர் வருகையின் போது அவரை அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் வரவேற்பது வழக்கம்.

மோடிக்கு எதிராக பேனர்கள்

ஆனால் தெலுங்கானா முதல்-மந்திரியும் , தெலுங்கானா ராஷ்ட்ரிய தலைவருமான சந்திரசேகர ராவ் பிரதமர் வருகையை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளார் இந்த நிலையில் தேசிய அளவில் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார்.

அதே சமயம்  2024 பாராளுமன்ற தேர்தலின்போது பாரதிய ஐனதாவை வீழ்த்துவதற்காக அவர் பல்வேறு வியூகங்கள் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தனது சொந்த மாநிலத்திற்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க செல்ல மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் கடந்த 6 மாதங்களில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை வரவேற்பதை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் புறக்கணித்துள்ளார் இந்த நிலையில் ஐதராபாத் நகரில் பிரதமர் மோடிக்கு எதிராக வைக்கப்பட்டு உள்ளது அதில் பை...பை.. மோடி என பேனர்கள் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

தன் அன்னை மடியில் குழந்தையாய் மாறிய பிரதமர் மோடி - வைரலாகும் வீடியோ