அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பே இல்லை - வைத்திலிங்கம்

ADMK AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Jul 04, 2022 12:00 AM GMT
Report

வருகிற 11-ந் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பே இல்லை என ஓ.பி.எஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

வைத்திலிங்கம் பேட்டி 

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான வைத்திலிங்கம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

வருகிற 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அழைப்பிதழ் அடித்து கொடுத்து வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பே இல்லை - வைத்திலிங்கம் | Aiadmk General Committee Meeting Vaithilingam

தலைமை கழகம் அறிவிப்பு என்ற பெயரில் அழைப்பிதழ் கொடுத்து வருவது ஏற்றுக்கொள்ள முடியாது. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் இன்றி இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுப்பது கண்டிக்கத்தக்கது.

11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பு இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சர்வாதிகார மனநிலையோடு செயல்படுகின்றனர். பொருளாளரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு தான் சின்னமும், கட்சியை வழிநடத்த அதிகாரமும் உள்ளது.

பெண்கள் அழகாக இருந்தால் கூடுதல் சம்பளம் கிடைக்கும் - எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!