நடிகர் விஜய் கூட நானும் என் தங்கச்சியும்... மொத்த யூனிட்டும் அத பாத்தாங்க - போட்டுடைத்த ஷகிலா!

Vijay Tamil Cinema Shakeela Tamil Actors Tamil Actress
By Jiyath Feb 19, 2024 04:20 PM GMT
Report

நடிகர் விஜய் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து நடிகை ஷகிலா பேசியுள்ளார்

நடிகை ஷகிலா

மலையாள திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. 1990களில் இவர் நடித்த கவர்ச்சி படங்கள் கேரளாவில் ஹிட் அடித்தது. பின்னர் ஆபாசப் படங்களில் நடிப்பதை தவிர்ந்த ஷகிலா, திரைப்படங்களில் அவ்வப்போது காமெடி வேடங்களில் நடித்து வந்தார்.

நடிகர் விஜய் கூட நானும் என் தங்கச்சியும்... மொத்த யூனிட்டும் அத பாத்தாங்க - போட்டுடைத்த ஷகிலா! | Actress Shakila Spoke About Actor Vijay

இதையடுத்து கடந்தாண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனக்குள் இருக்கும் சமையல் திறமையை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து இவரின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஷகிலா, நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது "ஆரம்ப காலகட்டத்தில் நான் விஜய்யுடன் நடித்துள்ளேன். என்னுடைய தங்கச்சியும் அவருடன் டான்ஸ் ஆடியுள்ளார்.

திருநங்கையாக மாறிய நடிகர் சிம்பு..? வெளியான பகீர் தகவல்!

திருநங்கையாக மாறிய நடிகர் சிம்பு..? வெளியான பகீர் தகவல்!

நம்பி போனேன்

அப்போது எங்களுக்கு பழக்கம் இருந்தது. பின்னர் எங்களுக்குள் ஒரு கேப் விழுந்தது. அவரின் அழகிய தமிழ் மகன் படத்தில் எனக்கு வாய்ப்பு வந்தது. அப்போது விஜய்யுடன் எனக்கு காட்சிகள் வேண்டாம் என்று சொல்லியிருந்தேன்.

நடிகர் விஜய் கூட நானும் என் தங்கச்சியும்... மொத்த யூனிட்டும் அத பாத்தாங்க - போட்டுடைத்த ஷகிலா! | Actress Shakila Spoke About Actor Vijay

அவர்களும் விஜய்க்கும் உங்களுக்கும் காட்சிகள் இல்லை என்று கூறியிருந்தார்கள். நானும் ஷூட்டிங்கிற்கு நம்பி போனேன். அப்போது முதல் நாளிலேயே எனக்கு விஜய்க்கும் காட்சிகள் இருந்தது. நான் விஜய்யிடம் எப்படி பேசுவது.. நம்மை ஞாபகம் வைத்திருப்பாரா? என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் வரும்போதே 'ஹாய் ஷகி' என்று சொல்லிக்கொண்டே விஜய் வந்தார்.

நான் அதை பார்த்து அதிர்ச்சியாகி விட்டேன். நானும் இத்தனை வருடம் கழித்தும் அவர் நம்மை மறக்கவில்லையே என்று நினைத்து பேசிக்கொண்டிருந்தேன். மொத்த யூனிட்டும் எங்கள் இருவரையும் தான் பார்த்தது" என்று ஷகிலா பேசியுள்ளார்.       

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்; பிரபல நடிகரிடம் பேசிய அம்மா - மாப்பிள்ளை யார் தெரியுமா..?

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்; பிரபல நடிகரிடம் பேசிய அம்மா - மாப்பிள்ளை யார் தெரியுமா..?