அவரோட அப்பா எங்கிட்ட அட்ஜஸ்ட்மென்ட் கேட்டாரு; அதுக்கு சம்பளம் வாங்கிட்டேன் - ஷகிலா பளீச்!
தன்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்த இயக்குநர் குறித்து நடிகை ஷகிலா பேசியுள்ளார்.
நடிகை ஷகிலா
மலையாள திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. 1990களில் இவர் நடித்த கவர்ச்சி படங்கள் கேரளாவில் ஹிட் அடித்தது. பின்னர் ஆபாசப் படங்களில் நடிப்பதை தவிர்ந்த ஷகிலா, திரைப்படங்களில் அவ்வப்போது காமெடி வேடங்களில் நடித்து வந்தார்.
இதையடுத்து கடந்தாண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனக்குள் இருக்கும் சமையல் திறமையை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து இவரின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும், அண்மையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஷகிலா பங்கேற்றிருந்தார். ஆனால் சென்ற வேகத்தில் வெளியேறி விட்டார்.
பேட்டி
இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஷகிலா, தன்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்த நடிகர் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது "தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷின் அப்பா, இயக்குநர் சத்யநாராயணா என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்டார்.
அடுத்த படத்தில் எனக்கு வாய்ப்பு தரேன்னு சொன்னார். நான் அப்போ அவரிடம் சொன்னேன் "சார் நான் இந்த படத்துக்கு சம்பளம் வாங்கிட்டேன். அடுத்த படத்தில் நடிக்க எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல.
எனக்கு அவசியமும் இல்ல. எதுக்கு என்னை இப்படி கூப்பிட்டீங்கனு" கேட்டேன். ஏன்னா நான் அந்தமாரி பண்ணாதே கிடையாது. எனக்கு அதுக்கு அவசியமும் வந்ததில்ல" என்று ஷகிலா பேசியுள்ளார்.