குளிர்பானத்தில் போதை மருந்து.. 16 வயசுலயே அத பண்ணாங்க - நடிகை கதறல்!
தனக்கு நடந்த சில கசப்பான அனுபவங்கள் குறித்து நடிகை ரஷாமி தேசாய் பேசியுள்ளார்.
ரஷாமி தேசாய்
நடிகை ரஷாமி தேசாய் தனது 16 வயதில் வேலை செய்யத் தொடங்கி 20 வயதில் நடிப்புத் துறையில் நுழைந்தார். இவர் கஜப் பைல் ராமா, கப் ஹோய் கவுனா ஹமர், நதியா கே தீர், துல்ஹா பாபு, பந்தன் டூடே நா போன்ற போஜ்புரி படங்களில் நடித்துள்ளார்.
மேலும் கடந்த 2021-ம் ஆண்டு நந்திஷ் சந்து என்ற சக நடிகரை மணந்தார். பின்னர் சில காரணங்களால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை விவாகரத்து செய்தார்.
வேதனை
இந்நிலையில், தனக்கு நடந்த சில கசப்பான அனுபவங்கள் குறித்து ரஷாமி தேசாய் பேசியுள்ளார். அதில், "16 வயதில் ஆடிஷன் ஒன்றுக்கு சென்றேன்.
அங்கு ஒருவர் குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து என்னிடம் தவறாக நடக்க முயன்றார்" என வேதனை தெரிவித்தார் . மேலும், சினிமா ஆடிஷனுக்கு சென்றபோது தன்னை ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.