2-வது காதலன் குறித்து மகன் கேட்ட அந்த கேள்வ.. - அதிர்ந்து போன நடிகை எமி ஜாக்சன்!
தனது காதல் குறித்தும் தனது மகன் குறித்தும் நடிகை எமி ஜாக்சன் பேசியுள்ளார்
எமி ஜாக்சன்
மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, 2.0, தெறி, கெத்து, தங்க மகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சமீபத்தில் அருண் விஜய்யுடன் 'மிஷன் - சாப்டர் 1' என்ற படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் ஜார்ஜ் பனயிட்டோ என்ற இங்கிலாந்து தொழிலதிபரை காதலித்து வந்த எமி, ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக திருமணம் செய்து கொள்ளாமலையே பிரிந்து விட்டனர்.
தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் ஆன எட் வெஸ்ட்விக் என்பவரை எமி ஜாக்சன் காதலித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இருவரும் மோதிரங்களை அணிந்து கொண்டனர். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட எமி ஜாக்சன், தனது காதல் குறித்தும் தனது மகன் குறித்தும் பேசியுள்ளார்.
பேட்டி
அவர் பேசியதாவது, "என் மகன் ஆண்ட்ரியாஸ்க்கு எட் வெஸ்ட்விக்கை சிறுவயதிலிருந்தே தெரியும். அவனக்கு நினைவு தெரிந்த நாள்களிலிருந்து அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகப் பழகி வந்தனர்.
எட் வெஸ்ட்விக் என் வாழ்விலும், என் மகன் வாழ்விலும் நீங்கா இடத்தைப் பிடித்திருந்தார். அதைப் பார்த்தப் பின்புதான் எட் வெஸ்ட்விக் எனக்கு நல்ல பார்ட்னராக இருப்பார் என்று அவரைக் காதலிக்கத் தொடங்கினேன். ஒரு நாள் என் மகன் ஆண்ட்ரியாஸே என்னிடம் வந்து, 'மம்மி, நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லையா, நீங்கள் ஏன் எட் வெஸ்ட்விக்கை இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள்' என்று கேட்டான்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. உடனே அவன், 'ஏன் என் அம்மாவை நீங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என எட் வெஸ்ட்விக்கிடமே சென்று நான் கேட்கப்போகிறேன்' என்றான். எங்கள் காதலுக்கு என் மகன் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டான் என்று நினைத்துக் கொண்டேன். அதன்பிறகு நானும், எட் வெஸ்ட்விக்கும் எங்கள் மனதில் இருந்த காதலை வெளிப்படுத்துக் கொண்டோம்" என்று தெரிவித்துள்ளார்.