பனி படர்ந்த இடத்தில் ப்ரொபோஸ் செய்த 2-வது காதலர்...! யெஸ் சொன்ன எமி ஜாக்சன்.!
நடிகை எமி ஜாக்சன் ஆங்கில நடிகர் எட் வெஸ்ட்விக்கின் திருமண ப்ரபோசலை ஏற்று கொண்டுள்ளார்.
எமி ஜாக்சன்
ஆர்யா நடிப்பில் வெளியான "மதராசபட்டினம்" படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அப்படம் பெரும் வரவேற்பை பெற, தமிழ் சினிமாவில் மட்டுமின்று இந்திய சினிமாவில் கவனமீர்த்தார் எமி.
அப்படத்தை தொடர்ந்து, விஜயுடன் "தெறி", விக்ரமுடன் "ஐ", ரஜினிகாந்துடன் "2.O" என அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் எமி ஜாக்சன் பொங்கல் தினத்தன்று வெளியான அருண் விஜயின் "மிஷன் சேப்டர் -1" படத்திலும் நடித்திருந்தார்.
ப்ரோபஸ்
கடந்த 2019ம் ஆண்டில் ஜார்ஜ் பனாயிடோ என்பவருடன் எமி ஜாக்சனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதே ஆண்டில் இத்தம்பதிக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் திருமணம் நடைபெறும் முன்னதாகவே இருவரும் பிரிந்தனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் எட் பீட்டர் வெஸ்ட்விக்குடன் எமி ஜாக்சன் டேட்டிங் செய்து வந்ததாக கூறப்பட்டது. தங்களது காதலை இருவரும் உறுதி செய்த நிலையில், தற்போது திருமணத்திற்கு எட் பீட்டர் எமி ஜாக்சனிடம் ப்ரபோஸ் செய்துள்ளார்.
இதனை எமி ஜாக்சன் ஏற்றுக்கொண்டுள்ளார். பனிபடர்ந்த இடத்தில் எட் பீட்டர் ப்ரோபஸ் செய்த தருணத்தை நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.