என் மனைவியே ஒருமாதிரி பாக்குறாங்க; நான் செஞ்சது சரிதான் - நடிகர் ஜெயம் ரவி பளீச்!

Jayam Ravi Tamil Cinema Actors Tamil Actors Tamil Actress
By Jiyath Feb 16, 2024 09:38 AM GMT
Report

வயதான கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து நடிகர் ஜெயம் ரவி பேசியுள்ளார்.

சைரன் திரைப்படம்

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் 'சைரன்'. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

என் மனைவியே ஒருமாதிரி பாக்குறாங்க; நான் செஞ்சது சரிதான் - நடிகர் ஜெயம் ரவி பளீச்! | Actor Jayam Ravi Talks About His Wife Aarthi

சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். குடும்ப அம்சங்களுடன் ஆக்சன் திரில்லராக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சைரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது. காட்சி முடிந்ததும் ஜெயம் ரவி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

கண்ண விட்டுட்டு அந்த இடங்கள தான் பாக்குறாங்க - ஓப்பனாக சொன்ன ஸ்ரீதேவி மகள்!

கண்ண விட்டுட்டு அந்த இடங்கள தான் பாக்குறாங்க - ஓப்பனாக சொன்ன ஸ்ரீதேவி மகள்!

ஜெயம் ரவி பேட்டி 

அப்போது அவரிடம் "இந்த படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளீர்கள். உங்கள் மனைவி ஆர்த்தி என்ன சொன்னார்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி "என் மனைவி ரொம்ப ஃபீல் பண்ணாங்க.

என் மனைவியே ஒருமாதிரி பாக்குறாங்க; நான் செஞ்சது சரிதான் - நடிகர் ஜெயம் ரவி பளீச்! | Actor Jayam Ravi Talks About His Wife Aarthi

தினமும் காலையிலிருந்து அந்த வெள்ளை தாடியுடன் ஊர் சுற்றிக் கொண்டு வீட்டிற்கு வரும்போது ஒரு மாதிரி பார்ப்பார்கள். 'என்ன இவன் என்ன யோசிச்சிட்டு இப்படி பண்ணிட்டு இருக்கான்?' என்று தான் பார்ப்பார்கள். ஆனால் ஆர்த்திக்கு என் மேல் ஒரு நம்பிக்கை உண்டு.

வேலையில் ஒழுங்காக இருப்பான் என நினைப்பார். அந்த நம்பிக்கையால் தான் என்னை சுதந்திரமாக செயல்பட சொன்னார். இன்னைக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாராட்டுக்கள் கிடைத்த போது நான் செய்தது சரிதான் என நினைத்துக் கொண்டேன் என்று ஜெயம் ரவி பேசியுள்ளார்.      

திருநங்கையாக மாறிய நடிகர் சிம்பு..? வெளியான பகீர் தகவல்!

திருநங்கையாக மாறிய நடிகர் சிம்பு..? வெளியான பகீர் தகவல்!