நடிகை பாலியல் புகார்.. நடிகருக்கு ஆண்மை சோதனை!

Sexual harassment Vijay Babu
By Sumathi 5 மாதங்கள் முன்

நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

விஜய் பாபு

இது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத் திரையுலகில் சமீப காலமாக பாலியல் குற்றச் சம்பவங்கள், அது தொடர்பான புகார்கள் எழுந்து வருகிறது.

vijay babu

இந்த வரிசையில் புதுமுக நடிகை தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் பாபுக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்திருந்தார். தன்னை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் கூறியிருந்தார்.

பாலியல் வன்கொடுமை

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் விஜய் பாபுவுக்கு கேரள நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஜூன் 22 முதல் ஜூலை 3 ஆம் தேதி வரை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் அதே நேரத்தில் போலீஸ் கைது செய்தால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

sexual harrasment

விசாரணைக்காக விஜய் பாபு எர்ணாகுளம் தெற்கு காவல் நிலையத்தில் ஆஜரா னார். அவரிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது, பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர்,

தொடர்ந்து விசாரணை

குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டதால் அவரை கைது செய்ததாக போலீசார் விளக்கம் அளித்தனர். மேலும் இது குறித்து தெரிவித்த கொச்சி துணை போலீஸ் கமிஷனர், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறிய அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ஹோட்டல் அறைகளுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அன்றே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆண்மை பரிசோதனை

வரும் ஜூலை 3ஆம் தேதி வரை விஜய்பாபு நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகை கூறிய ஹோட்டல் அறைகளுக்குச் சென்று விஜய் பாபுவிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

அதேநேரத்தில் விஜய் பாபுக்கு ஆண்மை பரிசோதனை செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.வரும் ஜூலை 3ஆம் தேதி வரை விஜய்பாபு நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். 

https://ibctamilnadu.com/article/googles-email-கருக்கலைப்புத் தடை: பெண் ஊழியர்களுக்காக கூகுள் எடுத்த அதிரடி முடிவு!