Friday, May 9, 2025

நடிகையின் சம்மதத்துடனே உடலுறவு - விஜய் பாபு பரபரப்பு வாக்குமூலம்!

Vijay Babu
By Thahir 3 years ago
Report

என் மீது பாலியல் புகார் கூறிய நடிகையின் சம்மதத்தின் பேரிலேயே இருவரும் உறவு கொண்டோம் என கொச்சி காவல் நிலையத்தில் நடிகர் விஜய் பாபு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பிரபல மலையாள நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஜய் பாபு மீது சினிமா வாய்ப்பு கேட்டு வரும் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்து கொண்டு வருகிறது.

நடிகையின் சம்மதத்துடனே உடலுறவு - விஜய் பாபு பரபரப்பு வாக்குமூலம்! | Act Vijay Babu S Sensational Confession

விஜய் பாபு மீது கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி இளம்பெண் பாலியல் புகார் அளித்தார். அதில் கொச்சியில் உள்ள அடுக்குமாடிகுடியிருப்பில் வசித்து வரக்கூடிய விஜய்பாபு தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி அவர் இது போன்று தவறாக நடந்து கொண்டதாகவும் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் கேரள நடிகையின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் நடிகையின் சம்மதத்தின் பேரில்தான் நாங்கள் இருவரும் பாலியல் உறவு கொண்டோம். நான் சினிமா வாய்ப்பு தராததால் அவர் என் மீது இது போன்ற பொய்யான புகாரை கொடுத்துள்ளார் என விஜய் பாபு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் ஆஜராக கொச்சி போலீஸார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் 39 நாட்களுக்கு பிறகு துபாயிலிருந்து கொச்சி வந்த விஜய் பாபு கொச்சி தெற்கு காவல் நிலையத்தில் ஆஜரானார்.

இதனையடுத்து கொச்சி போலீஸார் விஜய்பாபுவிடம் நேற்று 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. இதனால் மல்லுவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது.