கருக்கலைப்புத் தடை: பெண் ஊழியர்களுக்காக கூகுள் எடுத்த அதிரடி முடிவு!
அமெரிக்காவில் உள்ள பெண் ஊழியர்கள் கருக்கலைப்பு செய்ய விருப்பினால் எந்தவித காரணமும் தெரிவிக்காமல் தங்களது பணியிடத்தை மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.
கருக்கலைப்பு
1973ம் ஆண்டு அமெரிக்காவில், பெண்கள் விருப்பினால் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அரசின் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின் படி கருக்கலைப்பு செய்துகொள்ளும் உரிமை பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த ஜூன் 24 அன்று இதை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது அமெரிக்க உச்சநீதிமன்றம். தற்போது இந்தத் தீர்ப்பு சட்டமாக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளதால் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
போராட்டம்
மேலும் இது பெண்களின் அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளது என்று பெண்கள் அமைப்பினர் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் கருக்கலைப்பு செய்துகொள்ள விரும்பும்
பெண் ஊழியர்கள் வேறு நாடுகளுக்கு தங்களது பணியிடத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவனமான கூகுள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி உள்ளது.
கூகுள்
அதில், கருக்கலைப்பு செய்வதற்குத் தடை விதித்த இந்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகப் பெண்கள் மத்தியில் இது ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை ஆண்கள்,
பெண்கள் இருவருக்கும் சம உரிமை வழங்குகிறோம். அதுமட்டுமின்றி அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் பணிகள் குறித்து அக்கறை கொண்டுள்ளோம். எனவே அமெரிக்காவில் கருக்கலைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால்
சலுகைகள்
அமெரிக்காவில் உள்ள பெண் ஊழியர்கள் கருக்கலைப்பு செய்ய விருப்பினால் எந்தவித காரணத்தையும் தெரிவிக்காமல் தங்களது பணியிடத்தை மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்கலாம். உங்கள் விண்ணப்பம் உடனடியாக பரிசீலனை செய்யப்படும் என்று கூறியுள்ளது கூகுள் நிறுவனம்.
இதேபோல பேங்க் ஆஃப் அமெரிக்கா, கோல்ட்மேன் சாக்ஸ், சிட்டி குரூப், ஜேபி மார்கன் சேஸ், மெட்டா மற்றும் டிஸ்னி உள்ளிட்ட பல பெருநிறுவனங்கள் பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்கு ஆதரவாகச் சலுகைகள் மற்றும் நிதியுதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளன.
ஒருவேளை பெண் ஊழியர்கள் கருக்கலைப்பு செய்ய விரும்பினால், அதற்காக வேறு நாடுகளுக்குச் சென்று வருவதற்கான பயணச் செலவுகளை நிறுவனமே ஏற்கும்.
தன்பாலின திருமணம்: பெண்ணை காப்பகத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!