கருக்கலைப்பு சட்டம் விவகாரம்;அமெரிக்காவுக்கு மோசமான நாள் - ஜோ பைடன்..!

Joe Biden United States of America
By Thahir Jun 24, 2022 11:17 PM GMT
Report

கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டபூர்வ உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் ரத்துச் செய்ததால் இது அமெரிக்காவுக்கு மோசமான நாள் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கருக்கலைப்பு அனுமதி சட்டம் ரத்து

அமெரிக்காவில் 50 ஆண்டுகாலம் அமலில் உள்ள கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டப்பூர்வ உத்தரவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.

கருக்கலைப்பு சட்டம் விவகாரம்;அமெரிக்காவுக்கு மோசமான நாள் - ஜோ பைடன்..! | Abortion Law Issue Bad Day For America Joe Biden

கருகலைப்பு நடைமுறையை அமெரிக்க மாகாணங்களே கட்டுப்படுத்தலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ஜோ பைடன் பேச்சு

இந்த தீர்ப்பு குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இது தம்மை திகைக்க வைப்பதாகவும், அமெரிக்காவுக்கு ஒரு சோகமாக நாள் என்றும் தெரிவித்தார்.

கருக்கலைப்பு சட்டம் விவகாரம்;அமெரிக்காவுக்கு மோசமான நாள் - ஜோ பைடன்..! | Abortion Law Issue Bad Day For America Joe Biden

இந்த தீர்ப்பு இறுதியானதாக இருக்க கூடாது என்றும், கருக்கலைப்புக்கான உரிமைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஏழை பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், நீதிமன்றம் உண்மையில் அமெரிக்காவை 150 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.