தன்பாலின திருமணம்: பெண்ணை காப்பகத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
தனது தோழியை திருமணம் முடிப்பதற்காக இலங்கை வந்துள்ள இந்தியப் பெண்ணை, இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஊடாக,
இலங்கை தோழி
அவரின் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பெண்ணும் அவரின் இலங்கைத் தோழியும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்பட்டனர்.
அறையில் வைத்து குறித்த வழக்கை விசாரித்த நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா; இலங்கைப் பெண்ணை ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்ததோடு, அடுத்த மாதம் 29ஆம் தேதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பணித்தார்.
ஒன்றரை வயதுக் குழந்தை
அதுவரை அந்தப் பெண்ணை அவரின் ஒன்றரை வயதுக் குழந்தையுடன் பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்குமாறும் உத்தரவிட்டார். அதேவேளை இந்தியாவிலிருந்து வந்துள்ள - இலங்கைப் பெண்ணின் தோழியை, இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஊடாக அவரின் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறும்
நீதவான் கட்டளையிட்டார். இந்தியப் பெண்ணுடைய இலங்கைத் தோழியின் தந்தை, அக்கரைப்பற்று போலீஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, மேற்படி இரு பெண்களையும் கைது செய்த பொலிஸார், கடந்த 22ஆம் தேதி நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
திருமணம்
இதன்போது தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக, அந்தப் பெண்கள் இருவரும் நீதிமன்றில் தெரிவித்தார்கள். இதையடுத்து அவர்கள் இருவரையும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து - மனநல மருத்துவ அறிக்கையைப் பெற்று,
நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பணித்த நீதவான், அதுவரையில் அவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்!