வாழ்வு குடுக்க மாட்டியா? வடிவேலு.. இப்போ நீ எங்க இருக்கனு பாரு - விளாசிய ராதிகா!
நடுவர் வடிவேலு குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசியுள்ளார்.
நடிகர் வடிவேலு
வைகைப்புயல் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகர் வடிவேலு,காமெடியனாக மட்டுமில்லாமல் கதாநாயகனாகவும் நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். சில காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து சந்திரமுகி 2, மாமன்னன் ஆகிய படங்களில் நடித்தார். மாமன்னன் படத்தில் இவரின் மாறுபட்ட சிறப்பான நடிப்பு பலரையும் கவர்ந்தது. இந்நிலையில் நடிகர் வடிவேலு குறித்து நடிகை ராதிகா பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது "வடிவேலு பற்றி நான் பேச விரும்பல. அவரு பாவம் காமெடி பண்ணிட்டு இருக்காரு.
நீ எங்க இருக்க?
நான் அவரை கடைசியா சந்திச்சது ஒரு விமானத்துல. அப்போ என் கணவர் சரத்குமார் ஒரு படத்துக்காக அவர் கிட்ட பேசிட்டு இருந்தாரு. அப்போ என் சின்ன பையன் ராகுல். அவனுக்கு வடிவேலுன்னா ரொம்ப புடிக்கும்.
எனக்கும் தான் புடிக்கும். இவன் வடிவேலுகிட்ட "டாடி கூட நீங்க நடிக்கிறீங்களா? உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும்" என சொன்னான். அப்போ வடிவேலு "கண்ணா.. அரசியல்வாதியா இருக்குறவங்களுக்கு எல்லாம் நான் வாழ்வு குடுக்க மாட்டேன்" என்று சிரிச்சிட்டே சொன்னாரு.
அரசியலில் இருக்குறவங்க கூட எல்லாம் வடிவேலு நடிக்க மாட்டாராம். ஏனா.. அவங்களுக்கு வாழ்வு வந்துருமாம் . இன்னைக்கு என் கணவர் சரத்குமார் எங்க இருக்காரு..? நீ எங்க இருக்கனு பாரு?" என அந்த வீடியோவில் நடிகர் வடிவேலுவை, நடிகை ராதிகா சரத்குமார் விளாசியுள்ளார்.
You May Like This Video

யுத்தத்தை வழிநடத்திய மகிந்தவே நாடு வங்குரோத்தடையவும் தலைமை தாங்கினார்! கிண்டலடிக்கும் எம்.பி IBC Tamil
