அஜித்த பார்க்கவே இல்ல; பேசக் கூட மாட்டேன்.. ரொம்ப ஆட்டிட்யூட் - நமிதா பளீச்!
நடிகர் அஜித் குமார் குறித்து நடிகை நமிதா பேசியுள்ளார்.
நடிகை நமீதா
எங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமிதா. தொடர்ந்து ஏய், பம்பர கண்ணாலே, ஆணை, கோவை பிரதர்ஸ், நான் அவன் இல்லை, தீ, பில்லா, அழகான பொண்ணுதான்,
இளமை ஊஞ்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் அவர் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். மேலும், சமீப காலமாக அரசியலில் அதிகம் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
ரொம்ப ஆட்டிட்யூட்
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நமிதா நடிகர் அஜித் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "பில்லா படத்தில் நடிப்பதற்கு முன்பாக நடிகர் அஜித் குமாரை பார்த்ததே இல்லை.
பில்லா படம் முடிந்த பின்னரும் அஜித் குமாரை சந்திக்கவில்லை. அஜித் குமார் போலத்தான் நானும் மிகவும் பிஸியாக இருப்பேன். யாரிடமும் சரியாக பேசக் கூட மாட்டேன். அதனால். எனக்கு ரொம்ப ஆட்டிட்யூட் என கூறுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.