எனக்கு அதுக்கு ரொம்ப புடிக்கும்; ஆனா.. ஜிவி எத்தன தடவதான்'னு கேப்பாரு - சைந்தவி எமோஷனல்!

Tamil Cinema G V Prakash Kumar Tamil Actors Tamil Actress Saindhavi
By Jiyath May 18, 2024 05:00 PM GMT
Report

தனது திருமண நினைவுகள் குறித்து பின்னணி பாடகி சைந்தவி பேசியுள்ளார். 

ஜிவி பிரகாஷ் - சைந்தவி

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வளம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதல் திருமணம் செய்துகொண்டார்.

எனக்கு அதுக்கு ரொம்ப புடிக்கும்; ஆனா.. ஜிவி எத்தன தடவதான்

தற்போது இவர்கள் இருவரும் பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே இவர்களது விவாகரத்து முடிவு குறித்து பல வதந்திகள் இணையத்தில் பரவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்த சைந்தவி "எங்கள் விவாகரத்திற்கு யாரும் காரணம் இல்லை. இது எங்களின் நலனுக்காக இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு" என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக நேர்காணல் ஒன்றில் கலந்து சைந்தவி, தனது திருமணம் குறித்து பேசியிருந்தார். அதில் "எனக்கு என்னுடைய கல்யாணமே மறக்க முடியாத ஒரு மொமண்டாகத்தான் இருந்தது. காரணம், கிட்டத்தட்ட 12 வருடங்களாக, நாங்கள் காதலித்து, காத்திருந்து, கல்யாணம் செய்து கொண்டோம்.

உயிர்பிழைத்த ஜனகராஜ்; முகத்தில் ஆபரேஷன் - பலபேரை சிரிக்க வைத்தவரின் பரிதாப நிலைமை?

உயிர்பிழைத்த ஜனகராஜ்; முகத்தில் ஆபரேஷன் - பலபேரை சிரிக்க வைத்தவரின் பரிதாப நிலைமை?

மறக்கவே முடியாது

நான் அடிக்கடி எங்களது கல்யாண போட்டோக்களை எடுத்து பார்த்துக் கொண்டே இருப்பேன். அதை பார்க்கும் ஜிவி "எத்தனை முறைதான் நீ இந்த போட்டோக்களை மீண்டும் மீண்டும் பார்ப்பாய்? என்று கேட்பார்.

எனக்கு அதுக்கு ரொம்ப புடிக்கும்; ஆனா.. ஜிவி எத்தன தடவதான்

அதற்கு நான் "அந்த போட்டோக்களை பார்க்கும் போது அந்த மொமெண்டில் மீண்டும் வாழ்வது போன்ற உணர்வு எனக்கு கிடைக்கிறது என்பேன். எனக்கு அது மிகவும் பிடிக்கும். கல்யாண நாளன்று காலை எனக்கு ஒரு பொக்கேவும், சாக்லேட்டையும் ஜிவி கொடுத்து அனுப்பினார். அதில் ஒரு லெட்டரையும் ஜிவி இணைத்திருந்தார். அந்த லெட்டரில் "12 வருடங்களாக மிகவும் அன்பாக இருந்ததற்கு நன்றி.

இனிவரும் காலங்களிலும் நாம் இணைந்து இருப்போம்" என்று எழுதியிருந்தார். அது எனக்கு மிக மிக முக்கியமான ஒரு மொமண்டாகும். அதை என்னால் மறக்கவே முடியாது. அந்த பூ தற்போது வாடிவிட்டது. ஆனால் அவர் எழுதி அனுப்பியிருந்த லெட்டரை இன்று வரை பத்திரமாக வைத்திருக்கிறேன் " என்று எமோஷனலாக பேசியுள்ளார்.