ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து; விஜய் மனைவி சங்கீதா பாராட்டு? ரசிகர்கள் அதிர்ச்சி!
தங்களது காதல் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் மனைவி சைந்தவி பேசியுள்ளார்.
ஜிவி பிரகாஷ் - சைந்தவி
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருந்து வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதல் திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்கள் இருவரும் பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதனால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் சைந்தவி பேசிய பழைய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு வீடியோவில், தான் 8- வகுப்பு படிக்கும்போது ஜிவி பிரகாஷ் 10-வது படித்துக்கொண்டிருந்தாராம். அப்போதிலிருந்தே இருவரும் காதலித்தார்களாம்.
பாராட்டிய சங்கீதா
முதலில் நண்பர்களாக இருந்து பிறகுதான் காதலர்களாக மாறினார்களாம். ஆனால், இருவரும் காதலிப்பது தனது நண்பர் ஒருவருக்கும், ஜிவி பிரகாஷின் நண்பர் ஒருவருக்கும் தான் தெரியும்" என்று சைந்தவி தெரிவித்துள்ளார்.
அதேபோல் சைந்தவி ஜீவி பிரகாஷ் இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார். அந்தவகையில், தெய்வத்திருமகள் படத்தில் 'விழிகளில் ஒரு வானவில்' என்ற பாடலை சைந்தவி பாடியதற்காக, நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா பாராட்டி இருந்தாராம். அதற்குப் பிறகு சைந்தவிக்கும் சங்கீதாவிற்கும் நல்ல நட்பு உருவாகி இருந்ததாம்.
பிறகுதான் 'தலைவா' திரைப்படத்தில் 'யார் இந்த சாலை ஓரம்' என்ற பாடலை சைந்தவி பாடியிருக்கிறார். அதையும் சங்கீதா பாராட்டி இருந்தாராம். இவர்களுடைய காதல் 'தலைவா' திரைப்படத்திற்கு பிறகு தான் எல்லோருக்கும் தெரியவந்தது" என்று சைந்தவி கூறியுள்ளார்.