20 நாட்களில் 2 காதல் திருமணம் செய்த 19 வயது நபர் - 2வது மனைவியின் முடிவால் ட்விஸ்ட்!
19 வயது இளைஞர் ஒருவர் 20 நாட்களில் 2 காதல் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் பழக்கம்
பீகார் மாநிலம் ஜமு மாவட்டத்தின் அக்ஷரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (19). இவர் லக்ஷ்மிபூர் கிராமத்தை சேர்ந்த பிரீத்தி என்ற பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.

ஆனாலும், அவரை காதலித்து வந்த வினோத்குமார், பிரீத்தியை சந்திக்க அவரது கிராமத்திற்கு சென்றுள்ளார். இருவரும் வீட்டில் தனிமையில் இருந்ததை அறிந்த கிராம மக்கள், இருவரையும் பிடித்து வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதையடுத்து பிரீத்தியை தனது கிராமத்திற்கு அழைத்து வந்து வினோத்குமார் குடும்பம் நடத்தியுள்ளார். இதனிடையே தனது கிராமத்தை சேர்ந்த கிரிஜா என்ற பெண்ணையும் அவர் காதலித்து வந்துள்ளார்.
2 திருமணம்
இந்நிலையில் கிரிஜாவின் வீட்டிற்கு சென்ற வினோத்குமார் மீண்டும் கிராம மக்களிடம் சிக்கியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் கிராம மக்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

20 நாட்களிலேயே தனது கணவர் 2 திருமணம் செய்ததை அறிந்த முதல் மனைவி பிரீத்தி அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இரண்டாவது மனைவி கிரிஜா, முதல் மனைவி இருக்கும் வீட்டிலேயே வினோத்குமாருடன் வாழ விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரீத்தி எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை என்றும், அவ்வாறு அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம் IBC Tamil
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலட்சுமி ராஜ யோகம் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan