வடிவேலு டீ சாப்ட்டா கூட 10 பைசா குடுக்க மாட்டாரு; அதான் நல்லாருக்காரு - நடிகர் கஞ்சா கருப்பு!

Tamil Cinema Vadivelu Actors Ganja Karuppu Tamil Actors
By Jiyath Jan 05, 2024 03:15 PM GMT
Report

நடிகர் வடிவேலு குறித்து நடிகர் கஞ்சா கருப்பு பேசியுள்ளார்.

கஞ்சா கருப்பு

மதுரையைச் சேர்ந்தவர் நடிகர் கஞ்சா கருப்பு. பிதாமகன் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து இவர் ராம், சிவகாசி, சண்டக்கோழி, திருப்பதி, தாமிரபரணி, பருத்திவீரன், அழகிய தமிழ்மகன், திருப்பதி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

வடிவேலு டீ சாப்ட்டா கூட 10 பைசா குடுக்க மாட்டாரு; அதான் நல்லாருக்காரு - நடிகர் கஞ்சா கருப்பு! | Actor Ganja Karuppu Talks About Actor Vadivelu

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கஞ்சா கருப்பிடம் "ஒரு காமெடி நடிகர் எவ்வளவு பணம் வந்தாலும் மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டார். சக நடிகர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உதவு கூட மாட்டார் என்று ஒருவரை கூறுகிறார்கள்.

அவன் அது எதிர்பார்ப்பான்; நான் அவரு பொண்டாட்டி மாதிரி பேசுனாரு - கீர்த்தி சுரேஷ் பளீச்!

அவன் அது எதிர்பார்ப்பான்; நான் அவரு பொண்டாட்டி மாதிரி பேசுனாரு - கீர்த்தி சுரேஷ் பளீச்!

பேட்டி

அதுகுறித்து உங்களுடைய கறுத்தது என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கஞ்சா கருப்பு "நீங்க வடிவேலுவை தானே சொல்றீங்க. அவரு யாருக்கும் எப்பவும் குடுக்கமாட்டாரு.

வடிவேலு டீ சாப்ட்டா கூட 10 பைசா குடுக்க மாட்டாரு; அதான் நல்லாருக்காரு - நடிகர் கஞ்சா கருப்பு! | Actor Ganja Karuppu Talks About Actor Vadivelu

ரொம்ப நல்லவருங்க அவரு. குடுக்காதனாலதான் அவர் நல்லாருக்காரு. நம்ம குடுத்ததனாலதான் கெட்டுபோய்கிட்டு இருக்கோம். அவரு என்னைக்குமே நல்லாருப்பாரு.

யாருக்கும் ஒரு ரூபா குடுக்க மாட்டாரு. டீ சாப்பிட்ட இடத்தில் கூட 10 பைசா குடுக்க மாட்டாரு. அதனால்தான் அவரு நல்லா இருக்காரு" என்று பேசியுள்ளார்.  

You May Like This Video