நிர்வாணமாக நின்ற கும்கி பட நடிகர் - சிறுமிகளிடம் அத்துமீறல்!

Sexual harassment Kerala POCSO Child Abuse
By Sumathi Jul 07, 2022 07:56 AM GMT
Report

சிறுமிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பிரபல நடிகர் ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் ஸ்ரீஜித்

மலையாளம் , தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக இருப்பவர் நடிகர் ஸ்ரீஜித் ரவி. 46 வயதான நடிகர் கடந்த 4- ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பூங்காவில் அருகே தனது சொகுசு காரில் சென்றுள்ளார்.

srejith

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பள்ளி மாணவிகள் இருவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.14 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகள் அருகில் காரை நிறுத்திய ஸ்ரீஜித் நிர்வாணமாக அவர்கள் முன் தோன்றி ஆபாசமான வார்த்தைகளை பேசியதுடன்,

 சிறுமிகள் முன்  நிர்வாணம்

சிறுமிகளை தாக்கியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நடிகர் ஸ்ரீஜித் ரவியை கைது செய்துள்ளனர்.

kumki

இது முதல் முறையல்ல ஏற்கனவே ஸ்ரீஜித் கடந்த 2016-ம் ஆண்டு இது போன்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பு

70 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீஜித் ரவி தமிழில் கும்கி, வேட்டை, மத யானை கூட்டம், கதகளி, ஆயிரத்தில் இருவர், அசுரவதம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

அதோடு 60-க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் தோன்றியுள்ளார் ஸ்ரீஜித். இவர் பிரபல மலையாள நடிகர் டி.ஜி ரவியின் மகனாவார். தொடர்ந்து மலையாள திரையுலகில் பாலியல் அத்துமீறலில் நடிகர்கள் சிக்குவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடுத்த மனைவி.. சரமாரியாக தாக்கிய கணவன்! பின்னணி என்ன?