இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை , வீடியோ எடுத்த திமுக நிர்வாகி, பள்ளி மாணவர்கள் கைது

virudhunagar schoolstudents sexuallyharrassed
By Petchi Avudaiappan Mar 22, 2022 06:09 AM GMT
Report

விருதுநகரை சேர்ந்த 22 வயது பெண் அங்குள்ள ஆடை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விருதுநகரை சேர்ந்த  ஹரிஹரன் என்ற 27 வயது இளைஞர்பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

ஹரிஹரன் மேலத்தெருவில் பால் பண்ணை நடத்தி வந்துள்ளார், நாளாடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது , இந்த நிலையில் பெத்தனாட்சி நகரில் உள்ள மெடிக்கல் குடோனில் இளம் பெண்ணுடன் தனிமையில் இருந்த போது  வீடியோவாக எடுத்துள்ளார் .

இந்த நிலையில், அந்த வீடியோவை காட்டி ஹரிஹரன் தொடர்ந்து மிரட்டி அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் வீடியோவை பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி அந்த பெண்ணை தனது நண்பர்களுடன் தனிமையில் இருக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது

மேலும் , காதலியுடன் நெருக்கமாக இருந்ததை ரகசியமாக ஹரிஹரன் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் மொன்னி தெருவை அவரது நண்பரான திமுக நிர்வாகி ஜீனைத் அகமது, பிரவீன் மற்றும் அதே தெருவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேரும் அந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

இதனையடுத்து ஜீனைத் அகமது அந்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர் உட்பட 7 பேர் ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

எங்களது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதன் காரணமாக அந்தப்பெண் யாரிடமும் சொல்லாமல் அச்சத்தில் இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இளைஞர்களின் தொல்லை தாங்க முடியாமல் டிரைவர் வேலை பார்க்கும் மாடசாமியிடம் எடுத்துச்சொல்லி, காப்பாற்றும்படி கெஞ்சியிருக்கிறார்.

மாடசாமியோ, அந்த வீடியோவை தனது செல்போனுக்கு ஃபார்வேர்ட் செய்துகொண்டு, ‘அந்த 7 பேரிடம் பழகியதைப் போல என்னிடமும் பழகவேண்டும். மறுத்தால், இந்த வீடியோவை உன் அம்மாவிடம் காட்டுவேன்.’ என்று மிரட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

 மாடசாமியும் மிரட்டி, அதே தவறைச் செய்ததால் விரக்தியடைந்த இளம்பெண், கடந்த 6 மாத காலமாக வீடியோவைக் காட்டி மிரட்டி, 7 பேர் தன்னைத் தொடர்ந்து சிதைத்து வந்ததையும், மாடசாமியின் அத்துமீறலையும், குமுறலுடன் புகாராக எழுதி, விருதுநகர் பாண்டியன் நகர் காவல்நிலையத்தில் கொடுத்தார்.

இப்புகாரின் பேரில் திமுகவை சேர்ந்த இருவர், கூலி தொழிலாளிகள் இருவர், பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

இந்த சூழ்நிலையில் திமுக மகளிரணி தலைவரும், எம்.பி.யுமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதலைத் தருகிறது.

குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் கடுமையாகத் தண்டிக்கப் படவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.