61 வயது மூதாட்டியை மணந்த 24வயது பையன்.. குழந்தை பெற 1 கோடி செலவு!
24 வயதான இளைஞர் 61 வயதான பெண்மணியை திருமணம் செய்துகொண்ட சம்பவம் இணையதளத்தில் பலரின் கவனத்தை ஈர்த்தது. தற்போது அந்த தம்பதி ரூபாய் ஒரு கோடி செலவு செய்து வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையை பெறவுள்ளனர்.
திருமணம்
24 வயதே ஆன குரான் மெக்கெயின் என்பவர் 61 வயதான செரில் மெக் க்ரிகரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் முதன் முதலில் சந்தித்தது குரான் 15 வயதாக இருந்தபோது தான்.
செரிலுக்கு திருமணமாகி குழந்தைகள், மற்றும் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்துவிட்டன. குரான் அப்போது செரிலின் மகன் கிறிஸ் என்பவருக்கு பணியாற்றி வந்தார்.
37 வருடங்கள் மூத்த பெண்
ஆனால் அப்போது இருவருக்கும் இடையில் எந்த தொடர்பும் இருந்ததில்லை.எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் சந்தித்தனர். அப்போது இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போகவே, ஒரு வருடம் டேட் செய்த பின் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
தன்னை விட 37 வருடங்கள் மூத்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதால், பலரும் அந்த குரானை தூற்றி வந்தனர். செரிலிடம் இருக்கும் சொத்துக்காகத்தான் குரான் அவரை காதலிப்பது போல நடிக்கிறார் என்றும், திருமணம் என்பதெல்லாம் நாடகம் என்றும் கூறி வந்தனர்.
எட்டாவது குழந்தை
ஆனால் இந்த காதல் ஜோடி அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடந்த வருடம் திருமண பந்தத்தில் இணைந்தது. இவர்களது திருமணம் லைவ் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது.
தற்போது இவர்கள் இருவரும் ஒரு குழந்தையை பெறவுள்ளனர். ஏற்கனவே 7 குழந்தைகள் மற்றும் 17 பேரக்குழந்தைகள் செரிலுக்கு இருக்கும் நிலையில், தற்போது பிறக்கவுள்ளது இவருக்கு எட்டாவது குழந்தையாகும்.
வாடகை தாய்
குரானுக்கு இது தான் முதல் குழந்தையாம். இவர்கள் இக்குழந்தையை வாடகை தாய் மூலமாக பெறவுள்ளனர். அதற்கு இவர்கள் செய்யவுள்ள செலவு ரூபாய் 1 கோடி. 2023 ஆம் ஆண்டு இவர்களுக்கு குழந்தை கிடைக்கும் எனவும்,
இந்த நிகழ்வை அவர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறியுள்ளனர். செரில் குழந்தைக்கு தேவையானவற்றை ஷாப் செய்ய ஆரம்பித்துவிட்டதாகவும், மேலும் ஒரு Baby Shower நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்யப்போவதாக பூரித்துவருகிறார்.
நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.. நடந்தது என்ன?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

காத்திருக்கும் அதிர்ஷ்ட யோகம்! மகிழ்ச்சியில் திழைக்கப்போவது யார் தெரியுமா..! இன்றைய ராசிபலன் IBC Tamil

ஆவணியில் யார் வீட்டில் பணம் கொட்டப்போகுது? இந்த 5 ராசிக்காரர்களும் தொட்டதெல்லாம் பொன்னாகும்! Manithan

கிழிந்த ஆடையில் முட்டி தெரிய இலங்கை பெண் லொஸ்லியா! இந்த திடீர் மாற்றத்திற்கு யார் காரணம் தெரியுமா? Manithan

மிரட்ட வைக்கும் சீன கப்பலால் இந்தியாவுக்கு ஏற்பட போகும் பாதிப்புக்கள்..! வெளியாகிய அதிர்ச்சி தகவல் IBC Tamil
