நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.. நடந்தது என்ன?

Attempted Murder Chennai Pregnancy Marriage
By Sumathi 3 மாதங்கள் முன்

 கர்ப்பிணியாக இருந்த கோடீஸ்வரியின் கணவரான சஞ்சய் தினமும் குடித்துவிட்டு மனைவி கோடீஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டதாக விசாரணையில், தெரியவந்துள்ளது.

ஒப்பந்த ஊழியர்

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் இவரது மகன் சஞ்சய் வயது (21) சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி

suicide

இவருடைய மகள் கோடீஸ்வரி (21) இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடைய கடந்த வருடம் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டு

 தகராறு

கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி தீபாஞ்சம்மன் கோவில் தெருவில் தனியாக வீடு ஒன்று வாடகை எடுத்து வசித்து வந்தனர். சஞ்சய் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

chennai

கோடீஸ்வரியின் கணவரான சஞ்சய் தினமும் குடித்துவிட்டு மனைவி கோடீஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோடீஸ்வரி இரவு வீட்டில் கணவர் சஞ்சய் வேலைக்கு சென்ற பின்பு யாரும் இல்லாத நேரத்தில்

 தூக்கு போட்டு தற்கொலை

மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்பு அக்கம் பக்கத்தினர் மீட்டு கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர். மேலும் இது குறித்து, கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 ஒன்பது மாத கர்ப்பிணி

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் கொண்ட ஒரு வருடத்திலேயே ஒன்பது மாத கர்ப்பிணியான இளம்பெண் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெண்கள் அழகா இருந்தால்தான் கூடுதல் சம்பளம்.. மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த எம்எல்ஏ!