பெண்கள் அழகா இருந்தால்தான் கூடுதல் சம்பளம்.. மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த எம்எல்ஏ!

Tamil nadu DMK
By Sumathi 5 மாதங்கள் முன்

ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே வேலை என்றும், தகுதியுடைய பெண்களுக்கு என்றும் வேலை கிடையாது என சட்டமன்ற உறுப்பினர் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காந்தி ராஜன்

திண்டுக்கல்லில் பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கான கல்லூரி கனவு என்ற தலைப்பில் உயர்க்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

MLA

இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். இதில் கலந்து கொண்ட வேடசந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் மாணவர்களிடையே பேசினார்.

கூடுதல் சம்பளம் 

நிகழ்ச்சியில் பேசிய காந்திராஜன், "ஆங்கிலத்தை சரளமாக பேசுபவர்களுக்கு மட்டுமே அந்நிய நிறுவனங்களில் வேலைக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும், அதிலும் பெண்களாக இருந்தால் அழகு முக்கியம்,

பெண்கள் அழகா இருந்தால்தான் கூடுதல் சம்பளம்.. மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த எம்எல்ஏ! | Extra Salary If Women Are Beautiful Mlas Speech

அழகான ஹேண்ட்சம்முடன் இருக்கும் பெண்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும்" என்று பேசினார். இதனால் நிகழ்ச்சியில் கூடியிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

அழகு இருந்தால் வேலை

ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே வேலை என்றும், தகுதியுடைய பெண்களுக்கு என்றும் வேலை கிடையாது.

அழகு இருந்தால் மட்டுமே போதும் வேலை கிடைத்து விடும், அதிகமாக சம்பாதித்து விடலாம் என்ற ரீதியில் பேசிய பேச்சால் நிகழ்ச்சியில் பேசியதால் அங்கு கூடியிருந்த மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.      

பூமியை நோக்கி வரும் ராட்சத வால் நட்சத்திரம் : பேரழிவை ஏற்படுத்துமா ?