பூமியை நோக்கி வரும் ராட்சத வால் நட்சத்திரம் : பேரழிவை ஏற்படுத்துமா ?
எவரெஸ்ட் சிகரத்தை விட இரண்டு மடங்கு பெரிய வால் பூமியை கடக்க உள்ளதாக வானியல் ஆரய்ய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஒட்டு மொத்த வானியலும் பால்வழி அண்டமும் ஆச்சரியங்களும் அதிசயங்களும் பல புரியாத புதிர்களும் அடங்கியது. அதிலும் நமது சூரியக் குடுமபத்தில் பௌரிஎது கொள்ள முடியாத செய்திகள் உள்ளன என்பதுதான் உண்மை.
பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம்
இந்த நிலையில் பூமியை நோக்கி எவரெஸ்ட் சிகரத்தை விட் பெரிய வால்நட்சத்திரம் ஒன்று வந்து கொண்டிருப்பதாக ஆரய்ச்சியளர்கள் தெரிவித்துள்ளனர். C/2017 K2PANSTARRS என்று கூறப்படும் இந்த வால் நட்சத்திரம், முதன்முதலில் 2017 இல் சூரிய குடும்பத்தில் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை சுருக்கமாக k2என்று வானியல் ஆராய்ச்சியளர்கள் அழைத்து வந்தனர் K2 வால் நட்சத்திரம் இது வரை கண்டறியப்பட்ட வால் நட்சத்திரங்களில் மிகப் பெரியது எனக் கூறப்படுகிறது.
எவரெஸ்டை விட பெரியது
இந்த வால் நட்சத்திரம் ஜூலை 14 அன்று பூமியை நெருங்கும்போது, கே 2வின் அளவு 8 அல்லது 7 அதன் அதிக பிரகாச நிலையில் இருந்தாலும் பூமியிலிருந்து பார்க்கும்போது பிரகாசமாக இருக்காது என்று கூறும் வானியல் ஆய்வாளர்கள்.
சூரியனை நெருங்கிக் கொண்டிருக்கும் K2 டிசம்பர் 19ம் தேதி வரையில் தொலைநோக்கிகளால் பார்க்க முடியும். அதன்பிறகு அதை நம்மால் பார்க்க முடியாது எனக் கூறியுள்ளனர்.