நடிகர் பிரபாஸ்க்கு திருமணம் - பெண் யார் தெரியுமா?
பிரபல நடிகரான பிரபாஸுக்கு இந்த வருடம் திருமணம் நடைபெற இருப்பதாக அவரது உறவினர் கூறியுள்ளார்.
நடிகர் பிரபாஸ்
பாகுபலி படத்தின் மூலம் பலரது மனதிலும் ஆட்சி செய்து வருபவர் நடிகர் பிரபாஸ், இவருக்கு தமிழிலும் ஏரளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு சற்று அதிருப்தியை அளித்ததாக சில விமர்சனங்கள் எழுந்து வந்தது.
எப்போது திருமணம்
திரை வாழ்க்கையை தவிர்த்து இவரது நிஜ வாழ்க்கையில் பிரபாஸுக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
பல பேட்டிகளில் பிரபாஸிடம் அவரது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கு அவர் பதில் எதுவும் அளிக்காமல் சமாளிக்கும் விதமாக ஒரு சிறிய புன்னைகையுடன் அந்த கேள்வியினை கடந்து சென்றுவிடுவார்.
சமீபத்தில் அவரிடம் நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கேட்டதற்கு அவர், என் காதல் கணிப்புகள் எப்போதுமே தவறாகிவிடுகிறது, அதனால் தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறினார்.
தற்போது பிரபாஸின் திருமணம் குறித்து அவரது மாமாவும், பிரபல நட்சத்திரமுமான கிருஷ்ணம் ராஜு சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
அதாவது, பிரபாஸுக்கு மணமகள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்த வருடம் திருமணம் நிச்சயமாக நடக்கும் என்றும், திருமணம் தேதி குறித்த தெளிவான விரைவில் குடும்பத்தினர் வெளியிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபாஸ் திருமணம் குறித்து இவர் பேசிய இந்த சிறிய வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தனை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரபாஸின் திருமண தேதியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். தற்போது நடிகர் பிரபாஸ் சலார் மாற்றும் ஆதிபுருஷ் போன்ற படங்களில் பணிபுரிந்து வருகிறார்.